Vanitha Vijayakumar: முன்னணி கதாநாயகியாக இருக்கும் பல நடிகைகள் திருமண வயதை கடந்த பிறகு தான் செட்டில் ஆகிறார்கள். அதுவும் அவர்களுக்கான மார்க்கெட் குறையும் சூழலில் வெளிநாட்டு மாப்பிள்ளை, தொழிலதிபர் என யாரையாவது திருமணம் செய்து கொள்கின்றனர். அதிலும் கிழவி வயதில் இருக்கும் போது திருமணம் செய்த நடிகைகளும் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.
ஸ்ருதி: கன்னடத்தில் பிரபல நடிகையாக இருக்கும் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கே பாலச்சந்தரின் கல்கி படம் இவரை தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமாக்கியது. இவர் தன்னுடைய 23 வது வயதில் பிரபல இயக்குனர் மகேந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 11 வருடங்கள் கழித்து இந்த ஜோடி விவாகரத்து பெற்று விட்டனர். அதன் பிறகு 38 வயதில் தன்னைவிட இரண்டு வயது சிறியவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ருதி ஒரு வருடத்திலேயே அவரையும் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
அம்பிகா: 80 காலகட்ட சினிமாவை தன் கட்டுக்குள் வைத்திருந்த இவர் தன்னுடைய 26 ஆவது வயதில் பிரேம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களில் அவரை விவாகரத்து செய்த இவர் 38 வயதில் ரவிகாந்த் என்ற நடிகரை கல்யாணம் செய்தார். ஆனால் அதுவும் இரண்டு வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது. தற்போது இவர் சின்னத்திரை சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
ராதிகா: தற்போது 59 வயதாகும் இவர் மூன்று திருமணம் செய்து இருக்கிறார். அதில் தன் 22வது வயதில் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்த இவர் ஒரு வருடத்திலேயே அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு 27 வயதில் ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்தார். அவரையும் இரண்டு வருடங்களிலேயே விவாகரத்து செய்தார்.
அதன் பிறகு 38 வயதில் நடிகர் சரத்குமாரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்த சரத் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
வனிதா விஜயகுமார்: தன்னுடைய திருமணத்தின் மூலம் அதிக சர்ச்சையை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. தற்போது 42 வயதாகும் இவர் இதுவரை மூன்று திருமணம் செய்து இருக்கிறார். 20 வயதிலேயே நடிகர் ஆகாஷை திருமணம் செய்த இவர் சில வருடங்களில் அவரை விவாகரத்து செய்தார். அதை தொடர்ந்து ஆனந்த் ஜெயராஜன் என்பவரை உடனே திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சில வருடங்களிலேயே அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகு 40 வயதில் பீட்டர் பால் என்பவரை தன் மகள்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். இது பல விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் சில மாதங்களிலேயே அவரை விட்டு பிரிந்தார். இதற்கு இடையில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவரிடமும் இவர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.
சங்கவி: ஒரு காலத்தில் தன்னுடைய கவர்ச்சியான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தன்னுடைய 40வது வயதில் தான் முதல் திருமணமே செய்து கொண்டார். வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சங்கவி தன்னுடைய 42 வது வயதில் ஒரு குழந்தைக்கு அம்மாவானார்.
இவ்வாறு இந்த ஐந்து நடிகைகள் மட்டுமல்லாமல் இன்னும் சில நடிகைகளும் திருமண வயதை கடந்து கிழவியான நிலையில் திருமணம் செய்து இருக்கின்றனர். இருப்பினும் இந்த லிஸ்டில் நான்கு பேருடன் காதலில் விழுந்த வனிதா தான் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.