விவாகரத்து பெற்று தனியாக வாழும் விஜய் டிவியின் 5 பிரபலங்கள்.. ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்காத டிடி

விஜய் டிவியை பொறுத்தவரையில் இந்த தொலைக்காட்சியில் உள்ளவர்களையே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவ்வாறு செந்தில்-ஸ்ரீஜா, சஞ்சீவ்-ஆலியா மானசா போன்ற பல ஜோடிகள் தற்போது வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இதில் சில பிரபலங்கள் விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

டிடி : விஜய் டிவியின் தொகுப்பாளனியாக பல வருட காலம் பணியாற்றி வருபவர் திவ்யதர்ஷினி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நெடுகால நண்பரான ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடம் கூட இவர்கள் இருவரும் சேர்ந்து வாழவில்லை. தற்போது வரை டிடி தனியாக வாழ்ந்து வருகிறார்.

dd-srikanth

ரம்யா : விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளனியான ரம்யா, அப்ரஜித் என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் விஜயவாக ரம்யா பணியாற்றி வந்ததால் அது அவருக்கு அவன் அவருக்கு பிடிக்காததால் இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை நிலவியுள்ளது. இதனால் இவர்கள் விவாகரத்து பெற்ற பிரிந்துள்ளனர்.

vj-ramya

மகேஸ்வரி : விஜய் டிவியில் விஜேவாக பணியாற்றியவர் மகேஸ்வரி. சில சின்னத்திரை தொடர்களிலும் மகேஸ்வரி நடித்துள்ளார். இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில் கணவர் குடும்பத்துாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டார்.

maheswari

மேக்னா : விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்தவர் மேக்னா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு டான் டோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக விவாகரத்து பெற்று மேக்னா தனியாக வாழ்ந்து வருகிறார்.

meghna

ஹரிப்பிரியா : விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் என்ற தொடரின் மூலம் ஹரி பிரியா மற்றும் விக்னேஷ். இத்தொடரின் மூலம் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ள நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

haripriya-vignesh