ஒரு கோடி பட்ஜெட்டில் 30 மடங்கு லாபம் பார்த்த விஜய் சேதுபதியின் 5 படங்கள்.. தயாரிப்பாளர்களை குளிர வைத்த மக்கள் செல்வன்

Vijay Sethupathi: ஒரு காலத்தில் மினிமம் கேரன்டி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் விஜய் சேதுபதி. அவர் படங்கள் எப்படியும் ஒரு அளவு நல்ல வசூலை பெற்று தந்தது. அந்த வகையில் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகமாக லாபம் பார்த்த விஜய் சேதுபதியின் 5 படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சூது கவ்வும் : விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று சூது கவ்வும். அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட 35 கோடிக்கு அதிகமாக வசூல் செய்த சாதனை படைத்தது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் : வித்தியாசமான கதைகளைத்துடன் வெளியான படம் தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெறும் 80 லட்சத்தில் எடுக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 6 கோடி வசூல் செய்திருந்தது.

பீட்சா : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் திகில் கலந்த படமாக எடுக்கப்பட்டது பீட்சா. விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் பேர் ஆதரவு கொடுத்து இருந்தனர். மேலும் இப்படம் 1.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 8 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

சேதுபதி : விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்து வெளியான திரைப்படம் சேதுபதி. இந்த படம் அவரின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்தை பார்க்க குடும்பங்களுடன் ரசிகர்கள் திரையரங்குகளில் படையெடுத்தனர். இந்த படம் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 30 மடங்கு லாபத்தை பெற்று தந்தது.

தர்மதுரை : விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் வெளியானது தர்மதுரை படம். இந்த படம் 13 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 25 கோடி வசூல் செய்திருந்தது. இவ்வாறு தயாரிப்பாளர்களை நஷ்டம் அடையாமல் மிகப்பெரிய லாபத்தை விஜய் சேதுபதி தனது படங்கள் மூலம் கொடுத்திருக்கிறார்.