லாக் டவுனுக்கு பின் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 5 படங்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது திரையரங்குகள் மூடப்பட்டதால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பின்பு கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் அதற்குப் பின் வெளியாகி முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 5 படங்களை இப்போது பார்க்கலாம்.

வலிமை : நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு அஜித்தின் வலிமை படம் வெளியானது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இதனால் வலிமை படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 36.17 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இதே கூட்டணியில் அஜித்தின் அடுத்த படம் AK 61 படம் உருவாகி வருகிறது.

அண்ணாத்த : சிறுத்தை சிவா, ரஜினிகாந்த் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா என ஒரு திரை பட்டாளமே நடித்து இருந்தது. மேலும் இப்படம் முதல் நாள் வசூல் 34.92 கோடி வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி 169 படத்தில் நடிக்கயுள்ளார்.

பீஸ்ட் : முதல்முறையாக நெல்சன், விஜய் கூட்டணியில் வெளியான திரைப்படம் பீஸ்ட். மேலும் இப்படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் நடிகராகவும் அறிமுகமானார். இதற்கு முன்னதாக விஜய்யின் மாஸ்டர் படம் வசூல் செய்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இப்படம் வெளியாகி முதல் நாள் 26.40 கோடி வசூல் செய்தது. தற்போது விஜய், வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

எதற்கும் துணிந்தவன் : சூர்யா, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் பல வெற்றிப்படங்கள் வெளியாகியிருந்து. இந்நிலையில் இதே கூட்டணியில் பாண்டிராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படம் முதல் நாள் வசூலில்15. 21 கோடி வசூலை ஈட்டியது. இப்போது சூர்யா பாலாவுடன் இணைந்து தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் : லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் முதல் முறையாக வெளியான திரைப்படம் மாஸ்டர். அப்போது கொரோனா பரவல் சற்று அதிகமாக இருந்ததால் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆனாலும் மாஸ்டர் படம் முதல் நாள் வசூலில் 15.03 கோடியை எட்டியது. மேலும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்த சாதனை படைத்தது.