பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட 5 ஹீரோக்கள்.. தொழிலதிபர் மகளை கரம்பிடித்த விஜய்

சாதாரணமாக சினிமா தொழிலில் உள்ள பிரபலங்களுக்கு வெளியில் பெண் கிடைப்பது மிகவும் கஷ்டம். ஏனென்றால் சினிமாக்காரர்கள் என்று பெண் வீட்டார்கள் அவர்களை தட்டிக் கழிப்பார்கள். ஆனால் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகர்கள் சிலர் பணக்கார வீட்டுப் பெண்ணை மணமுடித்துள்ளனர். அந்த 5 ஹீரோக்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ராணா டகுபதி : பாகுபலி படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் ராணா. இவர் ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு கட்டிட உள் வேலைப்பாடுகள் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் மஹீகா பஜாஜ் என்ற பெண்ணை ராணா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ராம்சரண் : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த சிரஞ்சீவியின் மகனாக சினிமாவில் நுழைந்தவர் ராம்சரண். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்பல்லோ பவுண்டேஷனின் நிறுவனர் உபாசனா காமினேனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தையும் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார்.

துல்கர் சல்மான் : மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனாக சினிமாவில் நுழைந்தவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் நடித்த அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு மிகப்பெரிய தொழிலதிபரின் மகளான அமல் என்பவரை துல்கர் திருமணம் செய்து கொண்டார்.

அல்லு அர்ஜுன் : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினேகா ரெட்டியின் பெற்றோர் இருவருமே மிகப்பெரிய தொழிலதிபராக உள்ளவர்கள்.

விஜய் : தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் 1999இல் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவின் தந்தை சொர்ணலிங்கம் மிகப்பெரிய தொழிலதிபர். இந்நிலையில் விஜய், சங்கீதா இருவரும் காதலித்த திருமணம் செய்து கொண்டார்கள்.