இன்று காதலர் தினத்தை லட்சக்கணக்கான ஜோடிகள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பல இயக்குனர்கள் காதல் ரசத்தை ஊற்றும் அளவிற்கு பல படங்களை கொடுத்துள்ளார்கள். ஆனால் அதைவிட காதல் தோல்வியில் வந்த சில படங்கள் மனதை ரணமாக்கி உள்ளது. அந்தவகையில் தோல்வியில் முடிந்த 5 காதல் படங்களை இப்போது பார்க்கலாம்.
புன்னகை மன்னன் : பாலச்சந்தர் இயக்கத்தில் கமல், ரேவதி, ரேகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் புன்னகை மன்னன். இந்த படத்தில் கமல் மற்றும் ரேகா உயிருக்கு உயிராக காதலித்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் தற்கொலை செய்ய முற்படுவார்கள். அப்போது சந்தர்ப்ப சூழ்நிலையால் ரேகா இறந்து விட கமல் உயிர் பிழைத்து விடுவார். அதன் பின்பு ரேவதியுடன் காதலில் கமல் விழுகிறார். அதுவும் கடைசியில் கை கூடவில்லை.
பூவே உனக்காக : விக்ரமன் இயக்கத்தில் விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பூவே உனக்காக. இந்தப் படத்தில் விஜய் தனது காதலி வேறு ஒருவரை விரும்புகிறார் என்று தெரிந்தவுடன் அந்த காதலை சேர்த்து வைக்க போராடுகிறார். இந்தப் படம் விஜய்யின் கேரியரில் டைனிங் பாயிண்டாக அமைந்தது.
ஷாஜகான் : விஜய்யின் மற்றொரு காதல் தோல்வி படம் தான் ஷாஜகான். விஜய், ரிச்சா பாலோட் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இதில் விஜய்யின் காதலி வேறொருவரை விரும்புவார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இப்போது வரை ரசிகர்களின் ஃபேவரட் பாடலாக உள்ளது.
காதல் : பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் சந்தியா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல். இந்த படத்தில் பரத் மற்றும் சந்தியா இருவரும் காதலித்த பிரிந்து விடுவார்கள். அதன் பின்பு சந்தியா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் பரத் பைத்தியமாக சுற்றித் திரிவார்.
லவ் டுடே : பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து வெளியான திரைப்படம் லவ் டுடே. நவீன காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இளம் காதல் ஜோடி மொபைல் போனை மாற்றிக் கொள்வதன் மூலம் காதல் எப்படி தோல்வி அடைந்தது என்பதை இப்படம் காட்டி இருக்கும்.