கூடவே நடித்த ஹீரோக்களை கரெக்ட் செய்த 5 சீரியல் நடிகைகள்.. தனுசுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின்

Five Serial Artist: பொதுவாக திருமணங்கள் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட திருமணத்திற்கு முக்கியமானது காதல். இந்த காதலில் மட்டும் வேறுபாடு எதுவும் இல்லாமல் பார்த்து பழகியதும் ஒருவருக்கு ஒருவர் வந்துவிடும். அந்த வகையில் சீரியலில் நடிக்கும் போதே கூட நடிப்பவர்களின் மீது அளவு கடந்த காதல் ஏற்பட்டதால் அவர்களுடைய திருமண பந்தத்தில் சேர்ந்து விடுகிறார்கள்.

அப்படி சீரியலில் ஒன்றாக நடிக்கும் போதே ஒன்று சேர்ந்த ஆர்டிஸ்ட்களை பற்றி தற்போது பார்க்கலாம். இதில் எத்தனையோ நடிகர்கள் நடிகைகள் காதல் திருமணம் செய்து இருக்கிறார்கள். அதில் மிகவும் பிரபலமான ஜோடிகளை பற்றி பார்க்கலாம். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த பூவே பூச்சூடவா என்ற சீரியலில் மூலம் ரேஷ்மா ஹீரோயினாக அறிமுகமானார். இதில் இவருக்கு கொழுந்தனாக நடித்த மதன் என்பவரை நடிக்கும் போதே காதலித்து விட்டார்.

அதன் பின் இவர்களுடைய திருமணம் முடிந்த நிலையில் தற்போது சந்தோஷமான வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இதில் ரேஷ்மா விஜய் டிவியில் ஒளிபரப்பாகியுள்ள புது சீரியலான கிழக்கு வாசலில் ஹீரோயினாக மறுபடியும் என்டரி கொடுத்திருக்கிறார். அடுத்ததாக ஒரு சீரியல் இந்த அளவுக்கு ஃபேமஸ் ஆகி மக்களுக்கு பிடித்தமான ஜோடியாக இடம்பெற்ற சரவணன் மீனாட்சி.

இதில் மிர்ச்சி செந்தில் நாடகத்தில் நடித்த மீனாட்சி(ஸ்ரீஜா) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. மேலும் 1996 ஆம் ஆண்டு மர்ம கதையாக வெளிவந்த மர்மதேசம் நாடகத்தில் நடித்ததன் மூலம் தேவதர்ஷினி மற்றும் சேத்தன் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது வரை இவர்களுடைய திருமண பந்தம் இனிமையாக நகர்ந்து வருகிறது.

அடுத்ததாக நடித்த முதல் சீரியலிலே மனதை பறிகொடுத்த ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் மூலமாக இவர்களுடைய காதல் பூத்துக் குலுங்கி கல்யாணத்தில் முடிந்தது. தற்போது அழகான இரண்டு குழந்தைகளுக்கு சிறந்த பெற்றோர்களாகவும், அதே நேரத்தில் இனியா நாடகத்தில் ஆலியா முன்னணி நடிகையாகவும் கயல் நாடகத்தில் கதாநாயகனாகவும் சஞ்சீவ் நடித்து வருகிறார்.

அடுத்து வெள்ளி திரையில் தனுசுக்கு ஜோடியாக திருடா திருடி படத்தில் நடித்த சாயாசிங் சின்னத்திரையில் தெய்வமகள் நாடகத்தில் மூலம் பிரகாசாக ஜொலித்த கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் அனந்தபுரத்து வீடு என்ற படத்தில் நடித்ததன் மூலம் காதல் ஏற்பட்டு இல்லற வாழ்க்கைக்கு சென்று விட்டார்கள்.