வடிவேலு டூயட் பாடிய 5 சூப்பர் ஹீரோயின்கள்.. காமெடிக்காக செஞ்சாலும் ஆட்டம் போட்ட வைகைப்புயல்

Vadivelu: ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. நகைச்சுவை சக்கரவர்த்தி என சொல்லும் அளவிற்கு காமெடி டிராக்கில் கலக்கிய வடிவேலு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஹீரோ என்றால் டூயட் பாடாமலா ! காமெடி நடிகர் என்றாலும் கூட அப்போது முன்னணி கதாநாயகிகளாக இருந்த சில நடிகைகளும் இவருடன் ஆடிப்பாடி சிரிக்க வைத்தனர். அவ்வாறு வடிவேலுவுடன் டூயட் பாடிய 5 சூப்பர் ஹீரோயின்கள்…

அசின் : பிரபுதேவா இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த படம் போக்கிரி. இதில் அசின், பிரகாஷ்ராஜ், வடிவேலு, நாசர் ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் குங்ஃபூ மாஸ்டராக நடித்திருக்கும் வடிவேலின் அலப்பறை தாங்கவே முடியாது. படத்தில் வரும் எல்லா காமெடி சீன்களும் அவ்வளவு ரசிக்க வைக்கும். இதில் அசினுடைய ஹவுஸ் ஓனராக மற்றும் மாஸ்டராக வரும் வடிவேலு அசினை சுற்றி சுற்றி வருவார். விஜய்யுடன் அசின் வரும் இடங்களில் எல்லாம் அவரை ஃபாலோ பண்ணுகிற காட்சிகளில் வடிவேலு சீரியஸாக இருப்பவரையும் சிரிக்க வைத்துவிடுவார். அதில் அசினுடைய ஒரு போட்டோவை பார்த்து அவருடன் கனவில் ஒரு டூயட் பாடுவார் வடிவேலு. கஜினி படத்தில் வரும் சுட்டும் விழி சுடரே என்ற சூர்யா, அசின் பாடலுக்கு சூர்யாவை ஓவர் டேக் பண்ணி ஆடியிருப்பார் வடிவேல். அந்த பாடலில் அவருடைய டான்ஸ் மற்றும் முகபாவனைகள் ஒரிஜினல் பாடலையே மறக்க வைக்கிற அளவுக்கு செம மூவுமெண்ட்ஸ் கொடுத்திருப்பார் வடிவேலு. அசினும் அதே பாடலில் ஆடியது போல் எந்த ஒரு சுழிவும் இல்லாமல் வடிவேலுடன் ஆடி கலக்கி இருப்பார்.

Also Read : விருப்பம் இல்லாமல் அசின் ரிஜெக்ட் செய்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. சூர்யாவுடன் நடிக்க மறுத்த காரணம்

தமன்னா : M. ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் தமன்னா, வடிவேலு, சந்தானம் நடித்திருந்த படம் தில்லாலங்கடி. துறுதுறு சுறுசுறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஜெயம் ரவி. அவர் லைப்ல எதுனாலும் ஒரு திரில், கிக் வேண்டும் என்று நினைக்கிற கேரக்டர் அதற்காக எந்த அளவு ரிஸ்க் எடுக்கவும் தயங்கவே மாட்டார். அவரை காதலிக்கும் பெண்ணாக தமன்னா நடித்திருப்பார். ஒரு இடத்தில் அவரையே கிக்குகாக தான் லவ் பண்றேன்னு சொல்ல கடுப்பாகும் தமன்னா ரவியை வெறுப்பேத்த வடிவேலுவை காதலிப்பதாக ரவியிடம் கூறுவார். அதை நம்பிய வடிவேலும் ஒரு நிமிடம் தமன்னாவுடன் கனவில் டூயட் பாடுவார். அயன் படத்தில் சூர்யா, தமன்னா வரும் ஒரு பாடல் காட்சியில் பைக் டிரைவிங் இல் மிதப்பார். அந்தக் கனவு காட்சி போல் அமைந்த பாடலுக்கு தமன்னாவும் வடிவேலுடன் செம்மையாக நடித்துக் காமெடி செய்திருப்பார். படம் முழுவதும் வடிவேலும் தமன்னா பின்னால் அலையுற மாதிரியான காட்சிகளை ரசிக்காமல் இருக்கவே முடியாது.

சதா : இயக்குனர் யுவராஜ் தெனாலிராமன் படத்தை தொடர்ந்து அவர் இயக்கி வடிவேலு ஹீரோவாக நடித்த மற்றொரு படம் எலி. 1970 களில் நடந்த கதையாக அமைந்திருக்கும் இந்தப் படத்தில் துப்பறிவாளராக நடித்திருப்பார் வடிவேலு. இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருப்பார் நடிகை சதா. இந்திய அளவில் ஹிட்டான 1969 இல் வெளியான பாலிவுட் படமான ஆராதனா என்ற படத்தில் “மெரே சப்நோ கே” என்ற பாடல் இடம்பெற்று இருக்கும். பாலிவுட் ஹீரோ ராஜேஷ் கண்ணாவின் ஹிட்டான பாடலை கொலை செய்வது போல் இந்த பாடல் அமைந்திருந்தாலும், வடிவேலு ரசிகர்களுக்கு பிடித்தார் போல வடிவேலு புது மாதிரியான மேக்கப்பில் சதா உடன் நடனம் ஆடி இருப்பார். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் சதா ரூபாய் 25 லட்சம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

Also Read : ஷங்கர் படத்தில் இளம் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. நம்ம ‘நந்தினி’ சதா ரேஞ்சுக்கு வருவாங்களா?

தேஜாஸ்ரீ : இயக்குனர் சங்கரின் S பிக்சர்ஸ் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக அறிமுகம் ஆகிய படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. அதுவரை காமெடியில் மட்டுமே கலக்கிக் கொண்டிருந்த வடிவேலு முதன்முதலாக ஹீரோவாக படம் முழுவதும் காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பால் ஆச்சரியப்பட வைத்திருப்பார். பழம்பெரும் ஹிட் படமான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உத்தமபுத்திரன் படத்தை தழுவி இப்படத்தை வடிவேலுக்கு ஏற்றவாறு காமெடி திணித்து திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குனர். இதில் 2 வேடங்களில் நடித்திருப்பார் வடிவேலு. ஒரு வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருப்பார் தேஜாஸ்ரீ. பல ஃபாரின் கெட்டப்பில் பஞ்சவர்ண கிளியே என்ற டூயட் பாடல் ஒன்றில் நடனம் ஆடியிருப்பார்கள் வடிவேலு மற்றும் தேஜாஸ்ரீ. அந்த சமயத்தில் விஜய் போன்ற மாஸ் ஹீரோ உடன் ஜோடி போட்டு நடனமாடிய தேஜா ஸ்ரீ காமெடி நடிகர் ஆன வடிவேலுடன் நடித்தது ரசிகர்களுக்கு பெரும் வியப்பாக இருந்தது.

மோனிகா : இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் டூயல் ரோலில் நடித்தார் வடிவேலு. சீரியஸான ஹீரோவாக இன்னொரு கேரக்டர், அவருக்கு ஜோடியாக நடித்தவர் மோனிகா. அப்போது பல படங்களில் துணை நடிகை கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்தார் மோனிகா. இந்த படத்தில் ஆசை கனவே என்ற பாடலில் சிவாஜி படத்தைப் போன்றே ராஜா கால கெட்டப்பில் எம்.ஜி.ஆர் டூயட் பாடல் போல் பெர்பாம் செய்திருப்பார்கள் வடிவேலு மற்றும் மோனிகா.

Also Read : குழி தோண்டி புதைக்க நினைத்த கூட்டம்.. மீண்டும் நடிகனாக நிரூபித்த ‘மாமன்னன்’ வடிவேலுவின் வெற்றிக்கு காரணம்