தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் கிராமப்புற சூழலில் இணைந்து தனது நடிப்பினை வெளிப்படுத்தி, மக்களின் கவனத்தை பெற்று டாப் நடிகர்களுள் ஒருவராக இருந்தவர்தான் ராமராஜன். ஆனால் இவருக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் தனது நடிப்புத் திறனை, வெளிப்படுத்தி வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்தவர் தான் பாண்டியன். இப்படியாக இவரின் நடிப்பில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்களை இங்கு காணலாம்.
மண் வாசனை: பாரதிராஜா இயக்கத்தில் பாண்டியன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் மண்வாசனை. இதில் பாண்டியனுக்கு ஜோடியாக ரேவதி நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் இரண்டு ஊர்களுக்கு இடையே நடக்கும் கலவரங்களை மிக அருமையாக காண்பித்துள்ளனர். அதிலும் வினு சக்கரவர்த்தி, பாண்டியனுக்கு எதிராக தனது வில்லத்தனமான நடிப்பில் மாஸ் காட்டியிருப்பார்.
புதுமைப்பெண்: 1984 ஆம் ஆண்டு பாண்டியன் நடிப்பில் வெளியான திரைப்படம் புதுமைப்பெண். இதில் இவருக்கு ஜோடியாக ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் பாண்டியன், ராமச்சந்திரனாக மனைவிக்கு எதிராக சந்தேகப் பார்வையுடனே இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவரின் மூர்க்கத்தனமான குணத்தை உடைத்து பாரதி கண்ட புதுமை பெண்ணாக தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார் ரேவதி.
குவா குவா வாழ்த்துக்கள்: இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் குவா குவா வாத்துகள். இதில் சிவகுமார், ஸ்லோக்சனா, பாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளனர். படத்தில் இவர்கள் அடிக்கும் லூட்டியானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம்.
திருமதி ஒரு வெகுமதி: இயக்குனர் விசு இயக்கத்தில் பாண்டியன் நடிப்பில் வெளியான திரைப்படம் திருமதி ஒரு வெகுமதி. இதில் இவருடன் எஸ் வி சேகர், நிழல்கள் ரவி, விசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார். அதிலும் பாண்டியன், கிருஷ்ணன் என்னும் கதாபாத்திரத்தில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆண்பாவம்: பாண்டியராஜன் இயக்கி நடித்த திரைப்படம் தான் ஆண்பாவம். இதில் பாண்டியராஜன் உடன் பாண்டியன், ரேவதி, சீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் பெரிய பாண்டி என்னும் கதாபாத்திரத்தில் சீதாவை மனம் உருகி காதலிக்கும் காட்சிகளில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து வி கே ராமசாமி மகன்களைக் கண்டிக்கும் தந்தையாக பின்னி பெடல் எடுத்திருப்பார்.