சென்டிமென்ட்டாக 43 நாட்களுக்குள் வெளியான 6 படங்கள்.. முதலும் கடைசியுமாக சிவாஜி செய்த சாதனை

சிவாஜி கணேசன் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில் சென்டிமெண்டாக 43 நாட்களிலேயே தொடர்ந்து சிவாஜியின் 6 படங்கள் வெளியாகி உள்ளது. இதுபோல வேறு எந்த ஹீரோக்களின் படங்களும் இவ்வாறு வெளியானது இல்லை. அதில் ஒரே நாளில் இரண்டு சிவாஜி படங்களும் வெளியாகி உள்ளது.

நான் பெற்ற செல்வம் : சிவாஜி, வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் நான் பெற்ற செல்வம். இப்படத்தில் சிவாஜி சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி 1956-ல் வெளியாகி உள்ளது.

நல்ல வீடு : நான் பெற்ற செல்வம் படம் வெளியான அதே நாளில் சிவாஜியின் மற்றொரு படமான நல்ல வீடு படம் வெளியானது. இந்த படத்தில் சிவாஜி கணேசன், பாலையா, பண்டரிபாய் மற்றும் பலர் நடித்திருந்தார். இப்படம் அப்போது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நானே ராஜா : நான் பெற்ற செல்வம் மற்றும் நல்ல வீடு படங்கள் 1956 பொங்கல் பண்டிகை வெளியான நிலையில் ஜனவரி 25ஆம் தேதி நானே ராஜா படம் வெளியானது. இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தனர்.

தெனாலிராமன் : நானே ராஜா படம் வெளியாகி கிட்டத்தட்ட 8 நாட்கள் கழித்து சிவாஜி கணேசனின் தெனாலிராமன் படம் வெளியானது. அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து என் டி ராமராவ், பானுமதி ஆகியோர் நடித்திருந்தனர்.

பெண்ணின் பெருமை : சிவாஜி, ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம பெண்ணின் பெருமை. இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த படத்தில் சிவாஜி கணேசன் எதிர்மறையான கதாபாத்திரத்தை நடித்திருந்தார்.

ராஜா ராணி : பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜா ராணி. இந்தப் படத்திற்கு கலைஞர் கருணாநிதி திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்தார். இப்படம் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாகி இருந்தது.