Friendship Movies: என்னதான் காலத்திற்கு ஏற்ப கதைகளை மாற்றி வித்தியாசமாக படங்கள் வந்தாலும் எப்பொழுதுமே நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். அப்படி நண்பர்களை வைத்து வெற்றி பெற்ற படங்களை பற்றி ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.
தளபதி: மணிரத்தினம் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு ரஜினி மம்முட்டி நடிப்பில் வெளிவந்த தளபதி மூன்று கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 11 கோடி அளவில் வசூல் அடைந்து இருக்கிறது. சூர்யா மற்றும் தேவாக்கு இடையே உருவான நட்பு. நட்புக்காக என்ன வேணாலும் பண்ணலாம் என்று சொல்லும் சூர்யாவின் எதார்த்தமான நடிப்பும், பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு. வாழ வைக்க அவனை தவிர உறவுக்காரன் யாரும் இங்கு இல்லை, என் நண்பன் கேட்டால் உசுரை கூட தருவேன் என்று காட்சிக்கு காட்சி அருமையான நட்பை காட்டி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.
பிரண்ட்ஸ்: இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு விஜய் சூர்யா ரமேஷ் அரவிந்த் நடிப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இதில் சின்ன வயதில் செய்த ஒரு தவறுக்காக மட்டும் இல்லாமல் தன்னுடைய நண்பனை தனியாக தவிக்க விடக்கூடாது என்று நினைத்து அரவிந்த் கடைசி வரை சந்துருவுக்காக நின்னு போராடியது பார்க்கவே உணர்வு பூர்வமாக இருந்தது. இவர்களுடைய நட்புக்கு எந்தவித களங்கமும் இல்லாமல் சந்துருவும் உண்மையான நண்பனாக இருந்தார்.
புன்னகை தேசம்: இயக்குனர் ஷாஜகான் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு தருண்,சினேகா, குணால் நடிப்பில் புன்னகை தேசம் படம் வெளிவந்தது. தன்னுடைய நண்பர்கள், லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக தன்னுடைய கஷ்டத்தை எல்லாம் மறைத்து அவர்களை வெற்றியடைய வைக்கும் கணேசன் ஆக தருண் அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். அதே மாதிரி வெற்றியின் புகழை அடைந்த பிறகும் கணேசனின் நட்புக்கு உண்மையாக இருந்த நண்பர்களின் நட்பு வெற்றி பெற்றுவிட்டது.
நட்புக்காக: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு சரத்குமார் விஜயகுமார் நடிப்பில் வெளிவந்த நட்புக்காக படம் மாபெரும் வெற்றி படமாக ஜெயித்தது. இதற்கு முக்கிய காரணம் உண்மையான நட்புக்கு கடைசி வரை உறுதியாக இருந்த முத்தையாவின் நடிப்பும், நண்பன் இல்லை என்றால் நான் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெரிய ஐயாவாக விஜயகுமாரும் அவருடைய நட்பை காட்டியது பார்ப்பவர்களின் கண்ணில் கண்ணீர் வர வைத்தது.
நாடோடிகள்: சமுத்திரக்கனி இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு சசிகுமார் விஜய் வசந்த் பரணி நடிப்பில் நாடோடிகள் படம் வெளிவந்தது. இப்படத்தின் கதை எனது உண்மையான நட்பாக இருந்தால் உயிரையும் கொடுப்போம் என்று சொல்வதற்கு ஏற்ப நண்பன் படும் கஷ்டத்தை சரி செய்யும் விதமாக மொத்த நட்பையும் காட்டி பார்ப்பவர்களுக்கு இந்த மாதிரி ஒரு நண்பன் வேண்டும் என்று ஏங்க வைத்த ஒரு மிகச் சிறந்த படமாக வெற்றி பெற்றது.
நண்பன்: ஷங்கர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு விஜய் ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நடிப்பில் நண்பன் படம் வந்தது. காலேஜ் நண்பர்களை மையமாக வைத்து நண்பன் தவறு செய்தால் கண்டித்து நல்வழியில் கூட்டிட்டு போகணும் என்று சொல்வதற்கு ஏற்ப இப்படத்தின் காட்சிகள் அனைத்தும் அருமையாக இருந்தது. அதே நேரத்தில் நண்பர்கள் அவர்களுடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக கூடவே இருந்து வழிநடத்திய ஒரு நட்பு ரீதியான படமாக வெற்றி பெற்றது.