சௌகார் ஜானகி நடிப்பில் பட்டையை கிளப்ப கூடியவர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்றார் போல் பின்னிப் பெடல் எடுத்திடுவார். அவருடைய நடிப்புக்கு தீனி போடும் விதமாக சில கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவ்வாறு சௌகார் ஜானகி நடிப்பில் அசத்திய 6 படங்களை பார்க்கலாம்.
இரு கோடுகள் : பாலச்சந்தரின் அற்புதமான படைப்பான இரு கோடுகள் படத்தில் ஜெயா என்ற தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சௌகார் ஜானகி. இதில் கலெக்டராக அவர் வரும் காட்சிகள் பாராட்டை பெற்றது. இந்த படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதை பெற்றார்.
எதிர்நீச்சல் : நாகேஷின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் எதிர்நீச்சல் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றார் சௌகார் ஜானகி. இந்த படத்தில் பட்டு மாமியாக அவரது நடிப்பு அபாரம். அதில் ஒரு பாடலில் தனது பாவனையை அழகாக காட்டி இருந்தார்.
காவியத் தலைவி : ஆணின் ஆதரவு அற்று ஒரு தாய் மற்றும் மகள் இந்த சமூகத்தில் எவ்வளவு சிக்கலாக இருக்கும் என்பதை கண்முன் காட்டி இருந்தார் இந்த படத்தில் சௌகார் ஜானகி. அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தனது துணிச்சலான நடிப்பையும் வெளிப்படுத்துகின்றார். இந்த படம் அவரின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது.
புதிய பறவை : நடிகர் திலகம் சிவாஜிகே சௌகார் ஜானகி டஃப் கொடுத்த படம் புதிய பறவை. இந்த படத்தில் காவல் துறையினருக்கு உதவவும் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெண்ணாக சௌகார் ஜானகி நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல் தற்போது வரை பலரும் கேட்டு வருகிறார்கள்.
குமுதம் : சௌகார் ஜானகி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த வெளியான திரைப்படம் குமுதம். இந்த படத்தில் எம் ஆர் ராதா, ரங்காராவ், சுந்தரி பாய் மற்றும் பலர் நடித்திருந்தனர். குமுதா படத்தில் சௌகார் ஜானகியின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்து இழுத்தது.
தில்லு முல்லு : ரஜினி முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து நடித்த படம் தில்லு முல்லு. இந்தப் படத்தில் நடிப்பில் அசத்து இருப்பார் தேங்காய் சீனிவாசன். ஆனால் சில காட்சிகளில் அவரையே ஒவ்வொரு டேக் செய்திருந்தார் சௌகார் ஜானகி. இந்த படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து சிரிக்காத ஆளே இல்லை.