ஹீரோ வாய்ப்பு வேண்டாம் என ஒதுங்கிய 6 பழைய காதாநாயகர்கள்.. வாய்ப்பு வந்தும் தெறித்து ஓடிய சத்யராஜ்

80, 90 களில் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த ஹீரோக்களில் தற்போது கமல், ரஜினி மட்டும்தான் ஹீரோவாக தற்போதும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் ஒதுங்கி விட்டார்கள். சிலர் அவர்களுக்கு கிடைக்கும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டீசன்டான கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

சத்யராஜ்: தான் நடிக்கும் படங்களில் கோயமுத்தூர் குசும்புடன் நக்கலாக பேசியதன் மூலம், தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சத்யராஜ், ஆரம்பகாலத்தில் வில்லனாக அறிமுகமாகி அதன் பிறகுதான் அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இவர் முதன்முதலாக கமலஹாசன் நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளியான சட்டம் என் கையில், கண்ணன் ஒரு கைக்குழந்தை போன்ற படங்களில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு முரட்டு வில்லனாக மிரட்டி, பிறகு ரசிகைகளின் மனம் கவர்ந்த கதாநாயகனாக மாறினார்.

தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் ஹீரோவாக நடித்திருக்கும் சத்யராஜ், 2004 ஆம் ஆண்டு வெளியான அதிரடி படத்தில் கடைசியாக கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் வழுக்கைத் தலையுடன் என்னையும் கதாநாயகனாக ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் என நடித்திருந்த நிலையில், ரசிகர்கள் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்தது. இதனால் ஹீரோவாக நிறைய வாய்ப்புகள் வந்தும் அது நமக்கு செட்டாகாது என்று மறுத்துவிட்டாராம்.

சரத்குமார்: இவரும் சத்யராஜ் போன்றே ஆரம்பத்தில் வில்லனாக தான் தமிழ் சினிமாவிற்கு என்று கொடுத்தார் அதன்பிறகுதான் 90களில் சூப்பர் ஹிட் அடித்த படங்களில் கதாநாயகனாக நடித்து இவருக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார் அதன்பிறகு ஒரு கட்டத்தில் இவர் இவருக்கு ஹீரோவாக நடிக்கும் மார்க்கெட்டை இழந்தார் என்பதை புரிந்து கொண்டு குணச்சித்திர வேடங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

கார்த்திக்: நவரச நாயகன் கார்த்திக், பாரதிராஜா இயக்கத்தில் 1981-ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 80களில் தமிழ் சினிமாவின் டாப் கதாநாயகனாக வலம் வந்த கார்த்திக், 2000களில் வெளியான மனதில், குஸ்தி, இன்று, கலக்குர சந்துரு போன்ற படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்தித்ததால், இனி நமக்கு ஹீரோ கேரக்டர் செட் ஆகாது என்பதை உணர்ந்து, தற்போது வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிரபு: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி கதாநாயகனாக தென்னிந்தியாவில் வலம்வந்த நடிகர் பிரபு, உடல் பருமன் காரணமாக ஒரு கட்டத்தில் அவருக்கு ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தும் அதில் நடிக்க விரும்பவில்லை. இருப்பினும் முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார்.

அர்ஜுன்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் 90-களின் தொடக்கத்தில் கதாநாயகனாக வலம் வந்த ஆக்சன் கிங் அர்ஜுன், தற்போதுவரை கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற்றிருந்தாலும் சமீபகாலமாக இவர் கதாநாயகனாக நடிக்க மறுப்பு தெரிவித்து, வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்கள் எதை விரும்புகிறார்களோ அதையே செய்து கொண்டிருக்கிறார்.

பாக்யராஜ்: எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் கே பாக்யராஜ் மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

அதன்பிறகு இவர் இயக்கும் படங்களில் அவரை நடிக்கவும் துவங்கினார். அதன் பிறகு ஹீரோவாக நடிப்பதை விட இயக்குவதில் அதிக கவனம் செலுத்திய பாக்யராஜ், பிறகு குணசித்திர வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி கதாநாயகனாக வரும் வாய்ப்பை தட்டிக் கழித்து விட்டார்.

இவ்வாறு பழைய நடிகர்கள் தங்களுக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு வந்தும், அதை மறுத்துவிட்டனர். ஆனால் இப்போது வரை ரஜினி கமல் மட்டும் அவர்களுக்கு கிடைத்திருக்கும் முகராசியால் அப்போதிலிருந்து இப்போதுவரை ஹீரோவாகவே கெத்து காட்டிக் கொண்டிருக்கின்றனர்.