4 இல்ல 40 என்றாலும் நோ தான்.. சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த நடிகை

Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது. அந்த காவாலா பாடலில் தமன்னா குத்தாட்டம் போட்டாலும் 70 வயதிலும் ரஜினி தனக்கே உண்டான சில ஸ்டெப்புகள் போட்டிருந்தார்.

மேலும் ரஜினியுடன் இப்போதும் ஜோடி போட்டு நடிக்க இளம் நடிகைகள் ஆசைப்பட்டு வருகிறார்கள். ஆனால் அந்த காலகட்டத்தில் ரஜினியின் பட வாய்ப்பு ஒரு நடிகைக்கு வந்தாலும் ஏதோ சாக்குபோக்கு சொல்லி நிராகரித்து விட்டாராம். அதுவும் நான்கு படங்களில் ஒன்றாக நடித்தும் பாதியில் இருந்தே விலகி விட்டாராம்.

அதாவது டி ராஜேந்தரின் உயிருள்ள உஷா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நளினி. அந்த காலகட்டத்தில் நிற்க கூட நேரமில்லாத அளவிற்கு பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களிலேயே இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகு சின்னதிரையில் நளினி இறங்கி பட்டையை கிளப்பி வந்தார். இந்நிலையில் ரஜினியுடன் நளினி நடிக்காதது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த சமயத்தில் தம்பிக்கு எந்த ஊரு, மாவீரன், தங்கமகன், கை கொடுக்கும்கை ஆகிய படங்களில் முதலில் நளினி தான் நடித்திருக்கிறார்.

ஆனால் அப்போது படப்பிடிப்பில் அந்த சூழல் தனக்கு பிடிக்காத காரணத்தினால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி படத்தில் இருந்து விலகி விட்டாராம். அதுமட்டுமின்றி ஏனோ எனக்கு அந்த படங்களில் நடிக்க பிடிக்கவில்லை, ஏனென்றால் நான் ஒரு பைத்தியம் என்று வேடிக்கையாகவே நளினி கூறி இருக்கிறார்.

சினிமாவில் மிகவும் திறமை வாய்ந்த நடிகையான நளினி ரஜினியின் ஒரு படத்திலாவது நடித்து இருக்கலாம் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் நளினியோ 4 இல்ல 40 படம் வந்தாலும் அந்த காலகட்டத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.