தளபதியின் முதல்நாள் வசூலை தட்டி தூக்கிய அண்ணாத்த.. அடேங்கப்பா கபாலிக்கு பின் செய்த சாதனை

என்னதான் படங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக முதல் நாளில் வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம். இந்த வரிசையில் தற்போது அண்ணாத்த முதல் இடத்தை பிடித்துள்ளது. அதாவது முதலிடத்தில் இருந்த தளபதி விஜயின் சர்க்கார் படத்தை தாண்டி விட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அண்ணாத்த: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். நேற்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் அண்ணாத்த படம் வெளியானது. கொரானா வைரஸ் பரவலுக்கு பிறகு மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படம் மற்றும் தீபாவளி அன்று வெளியானதால் மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. நேர் மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற அண்ணாத்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் கிட்டத்தட்ட 34 கோடி வசூல் செய்து தளபதி விஜய்யின் படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

சர்கார்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2018 இல் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் சர்கார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே பல சர்ச்சைகளுக்கு உள்ளானது. பின்பு வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் 32 கோடி வசூலை ஈட்டியது. அப்போது பாக்ஸ் ஆபீஸ் கிங்கான சூப்பர் ஸ்டாரின் காலா படத்தை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது. இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வசூல் வேட்டையாடியது சர்க்கார் திரைப்படம்.

மாஸ்டர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் 2021 ல் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. விஜயின் படங்கள் தமிழ் மொழியில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பெரும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். இப்படம் வெளியிடும்போது கொரோனா காலகட்டம் என்பதால் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்டது. இதனால் அனைத்து திரையரங்குகளும் நிரம்பி வழிந்தன. மாஸ்டர் திரைப்படம் வெளியான முதல் நாளில் 26 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்தது.

பிகில்: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2019 தீபாவளி அன்று வெளியான திரைப்படம் பிகில். இப்படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். தமிழ்நாட்டில் மட்டும் பிகில் திரைப்படம் வெளியான முதல் நாளே 26 கோடி வசூல் செய்தது. 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிகில் திரைப்படம் வெளியான 4 நாட்களில் 152 கோடி வசூல் செய்திருந்தது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அதிக வசூல் செய்துள்ள திரைப்படம் என்ற பெயரை பிகில் திரைப்படம் பெற்றுள்ளது.

மெர்சல்: தெறி படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த படம் மெர்சல். இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், கோவை சரளா என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை தொடர்ந்து வந்தாலும் படம் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து சாதனை படைத்தது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சில கட்சிகளின் எதிர்ப்பலை படத்திற்கு சாதகமாக அமைந்து வசூலில் வேட்டையாடியது. இப்படம் வெளியிட்ட முதல் நாளே 23 கோடி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது.

கபாலி: பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2016-ல் வெளியான திரைப்படம் கபாலி. படத்தில் ராதிகா ஆப்தே, ஜான் விஜய், ரித்திகா, தன்ஷிகா என பலர் நடித்திருந்தார்கள். இப்படம் மலேசியாவில் உள்ள ஒரு தாதாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கபாலி திரைப்படம் முதல் நாளே 21.5 கோடி வசூல் பெற்று பாக்ஸ் ஆபிஸில் இடம்பெற்றது.