சினிமாவை பொறுத்த வரையிலும் மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடித்து அவர்களின் மனதில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனாலும் சில நடிகர்கள் குணச்சித்திரம், வில்லன், காமெடி கதாபாத்திரங்களில் அஜித்துடன் நடித்ததன் மூலம் ஆஸ்தான நடிகர்களாக பிரபலமாகியுள்ளனர். இப்படியாக அஜித் கூடவே வைத்திருக்கும் 5 நடிகர்களை இங்கு காணலாம்.
ஜான் கொக்கன்: சிவா இயக்கத்தில் அஜித்குமார், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் வீரம். இதில் ஜான் கொக்கன் அஜித்திற்கு வில்லனாக மாஸ் காட்டி இருப்பார். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அஜித் நடிப்பில் கேங்ஸ்டர் படமாக வெளியான துணிவு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மகாநதி சங்கர்: இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் குமார், லைலா நடிப்பில் வெளியான திரைப்படம் தீனா. இப்படத்தில் வரும் வத்திக்குச்சி என்னும் பாடலுக்கு முன்பாக நீ ஆடு தல என்று அஜித்தை பார்த்து, இவர் பேசும் வசனம் இன்றளவும் பிரபலமாக உள்ளது. இந்த ஒரு வசனத்தால் இன்று வரை அஜித் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
ரமேஷ் கண்ணா: சரண் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அமர்க்களம். இப்படத்தில் அஜித்துடன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ரமேஷ் கண்ணா நடித்துள்ளார். இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து வெளியான வீரம் திரைப்படத்திலும் தோன்றியுள்ளார். இதில் அஜித்தின் நண்பனாக தனது அசாதிய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அருண் விஜய்: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இதில் நண்பராக இருந்து பின் எதிரியாக மாறி விக்டர் என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். தற்பொழுது இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் ஏகே 62 படத்திலும் மீண்டும் வில்லனாக மிரட்ட வருகிறார்.
தம்பி ராமையா: சிவா இயக்கத்தில் பாரதி ரெட்டி தயாரிப்பில் வெளியான திரைப்படம் வீரம். இதில் அஜித்துடன் தமன்னா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இப்படத்தில் தம்பி ராமையா அஜித்தை எப்படியாவது தனது அண்ணனிடம் மாட்டி விட வேண்டும், என்ற எண்ணத்தில் இருப்பார். இதில் இவர் வில்லன் கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விசுவாசம் படத்திலும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.