பொதுவாக சினிமாவில் உள்ள பல பிரபலங்களின் பெயர் நிஜ பெயர் கிடையாது. அதாவது இயக்குனர்கள் தங்களது படத்தில் உள்ள நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சில பெயர் வைக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு அடையாளமாக மாற பிற்காலங்களில் இதுதான் அவர்களின் நிஜப் பெயராகவே மாறிவிடுகிறது.
அந்த வகையில் பாரதிராஜா பெரும்பான்மையான நடிகர், நடிகைகளுக்கு பெயர் வைத்துள்ளார். அதுவும் அவர் நடிகைகளுக்கு ரா என்ற எழுத்தில் தான் அதிகம் பெயர் வைப்பார். இந்நிலையில் தனுஷுக்கும் சினிமா பிரபலம் ஒருவர் தான் இந்த பெயரை வைத்துள்ளார். இது பலரும் அறியாத விஷயமாகும்.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அதன் பின்பு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற அந்தஸ்தையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில் தனுஷின் உண்மை பெயர் என்னவென்றால் வெங்கட் பிரபு. அப்போது கங்கை அமரனின் மூத்த மகன் இயக்குனர் வெங்கட் பிரபுவும் இதே பெயரில் இருந்து உள்ளார். மேலும் இயக்குனர் செல்வராகவன் தான் அதன் பின்பு தனது தம்பி வெங்கட் பிரபுவின் பெயரை தனுஷ் என்ற மாற்றினார்.
இதைத்தொடர்ந்து தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை என பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி இருந்தது. அதன் பின்பு தனுஷ், வெற்றிமாறன் உடன் கைகோர்த்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்திருந்தார்.
மேலும் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என அவரது வளர்ச்சி பறந்து திரிந்து கிடக்கிறது. இதற்கெல்லாம் ஒரு வகையில் புள்ளையார் சுழி போட்டது செல்வராகவன் தான். தற்போது தனுஷ் என்ற பெயர் பட்டி தொட்டி எல்லாம் பரவி உள்ளது. ஆனால் இப்போதும் தனுஷ் குடும்பத்தில் அவரை பிரபு என்று தான் அழைத்து வருகிறார்கள்.