Amazon : Amazon prime தற்போது படங்களை சிறப்பாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஒருசில படங்கள் நல்ல வரவேற்பை பெற்று பரபரப்பாக பேசப்படுகிறது,அந்த வரிசையில் தற்போது “டபுள் டமாக்கா” போல ஒன்றை பார்த்தால் ஒன்று ஒட்டிக்கொண்டு என்னையும் பார்த்து விட்டு செல்லுங்கள் என ஆடி ஆஃபர் போல வருகிறது இன்னொரு படமும்.
அந்த வரிசையில் தற்போது ட்ரெண்டிங்-இல் “Eleven” என்ற படம் பார்வையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த “Eleven” படம் 2025-ல் நல்ல திரில்லர் மூவியாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.சீரியல் கில்லரை பற்றிய படம் என்பதால் ஆர்வம் குறையாமல் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்றவாறு படம் செல்கிறது.
சென்னையில் மர்மமான முறையில் ஒரே ஒரு நபரால் ஒரே மாதிரியான கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதை விசாரிக்கும் விசாரணை ஆணையர் விபத்தில் சிக்கிக் கொள்ள கதாநாயகரிடம் இந்த பொறுப்பு வருகிறது. கதாநாயகன் நவீன் சந்திரா பொறுப்பு உதவி ஆணையராக உள்ளார். இந்த சீரியல் கில்லரை எப்படி நெருங்கிகிறார்கள் என்பதே கதை.
இந்த படத்தை டைரக்டர் பி.எல்.சுப்பேந்தர் தரமான முறையில் தயாரித்துள்ளார். முதல் பாதியை விட இரண்டாம் பாதி பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது. பிளாஸ்பேக் கதையை அருமையாக எடுத்துள்ளனர். இது தற்போது amazon-ல் ஒளிப்பராகிக்கொண்டு இருக்கிறது.
டபுள் டமாகா ஆஃபர்
இதில் ஆச்சர்யப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் ஒன்னு வாங்கினால் ஒன்னு இலவசம் போல நமக்கு amazon-ல் “Eleven” மூவி-யை பார்த்தவுடன் அதைத்தொடர்ந்து “Blindspot” மூவி ஒட்டிக்கொண்டே வருகிறது.
இந்த “Blindspot” மூவி மே 9, 2025 அன்று வெளியான தெலுங்கு திரைப்படமாகும் . இந்த படத்தை ராகேஷ் வர்மா இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு நாடக வகையை சேர்ந்தது. நடிகர் நவீன் சந்திரா மற்றும் ராஷி சிங் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் கணவன் மனைவியாக வாழும் தம்பதிகள் இடையில் சண்டை வந்து கணவன் வெளியே செல்கிறான். பின் வீட்டிற்கு வந்து பார்த்தால் மனைவி இறந்து கிடக்கிறாள். முதலில் இது தற்கொலையாக கருதப்பட்டாலும் பிறகு சந்தேகிக்கப்படுகிறது.
பின் இது ஒரு சூழ்ச்சி நிறைந்த கொலை என்பதை கண்டறிந்து விசாரணை செய்கிறார்கள். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான நவீன் சந்திரா இத்திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். மேலும் இத்திரைப்படம் பார்வையாளர்களை கொஞ்சம் கூட திசை திரும்ப விடாமல், கதையின் சுவாரஸ்யம் கதையின் பின்னே அழைத்து செல்கிறது. ஒளிபரப்பு நேரம் இத்திரைப்படத்தின் பிளஸ்.
இந்த இரட்டை படங்களும் இரட்டையர்களை போல நம்மை ஈர்க்கிறது. நம் நேரத்தை வீணடிக்காமல் இந்த “Eleven” மூவி மற்றும் “Blindspot” மூவியும் தரமாக உள்ளது. ட்ரெண்டிங்கில் உள்ள இந்த திரில்லர் மற்றும் கிரைம் திரில்லர் மூவியை பார்த்து மகிழுங்கள்.