மொத்த படக்குழுவும் வெயிட் பண்ண வைத்த நடிப்பு ராட்சஸன்.. எம்ஜிஆர், சிவாஜியும் காக்க வைத்த பரிதாபம்!

ஒரு படம் இயக்குவதில் ஹீரோ, ஹீரோயின்களின் கால்ஷீட் பிரச்சனையால் படம் தள்ளிப் போக அதிக வாய்ப்புள்ளது. ஆனால் எம்ஜிஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களும் இவரின் கால்ஷீட்டுக்காக காத்து இருந்த காலமும் உண்டு.

அந்த காலத்தில் எம்ஜிஆர் படத்துக்கு என்றால் ஒரு நடிப்பு டீம், சிவாஜி படத்துக்கு என்றால் ஒரு தனி நடிப்பு டீமும் இருந்து. ஆனால் இவர்கள் இரண்டு பேர் படத்திலும் நடிக்க கூடிய முக்கியமாக ஆட்களில் ஒருவர் தான் தாமரைக்குளம் படத்தில் அறிமுகமான நடிப்பு ராட்சஸன் நாகேஷ்.

இவர் ஹீரோ, வில்லன், காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் கலக்கியவர் நாகேஷ். அந்தக் காலத்தில் ஏவிஎம் படமாக இருந்தாலும், தேவர் பிலிம்ஸ் கம்பெனியாக இருந்தாலும் சரி, பத்மினிd பிக்சர்ஸ் பிஆர் பந்துலுவாக இருந்தாலும், ஏபி நாகராஜனாக இருந்தாலும் எல்லா தயாரிப்பு நிறுவனங்களும் முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள்.

அதன்பிறகு தான் கதாநாயகன், கதாநாயகியையே தேர்வு செய்வார்கள். அந்த அளவுக்கு நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் நாகேஷ். இவர் படு பிஸியாக இருந்த அந்த காலகட்டங்களில் இவருக்காக மொத்த படக்குழுவும் வெயிட் பண்ணிய நேரமும் உண்டு.

அதில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களும் இதில் அடங்கும். நாகேஷ் நடித்தால் அந்தப் படத்திற்கு 40 சதவீத வெற்றி உறுதி என எம்ஜிஆரே பலமுறை கூறியுள்ளார். எம்ஜிஆர், சிவாஜி நடிகர்களுடன் நடித்து அதன்பிறகு கமல், ரஜினி என அடுத்த தலைமுறையும் கடந்தும் நகைச்சுவை மன்னனாக இருந்தார் நாகேஷ். இவர் கடைசியாக கமலின் தசாவதாரம் படத்தில் நடித்திருந்தார்.

இப்பவும் அவர் காமெடியை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரின் இழப்பு சினிமா துறையில் தற்போது வரை யாராலும் ஈடு கொடுக்க முடியவில்லை என்றால் அது மிகையாகாது.