70-களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவை ஆட்டிப் படித்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 5 படங்களில் அவருக்கு வில்லனாக பாலிவுட் நடிகர்கள் நடித்து மிரட்டி இருப்பார்கள். அதிலும் தளபதி படத்தில் ஹிந்தி நடிகர் அம்ரீஷ் பூரி மொட்டை தலையுடன் சூப்பர் ஸ்டாருக்கு இதுவரை நடித்த வில்லன்களை விட தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
அம்ரீஷ் பூரி: 1991 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மம்மூட்டி, அரவிந்த்சாமி, ஷோபனா உள்ளிட்டோர் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த படம் தான் தளபதி. இந்த படத்தில் மம்முட்டி மற்றும் ரஜினியின் நட்பு படத்திற்கு பேக் போனாக அமைந்தது மட்டுமின்றி இந்த படத்தின் வில்லனின் நடிப்பு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனென்றால் இதில் வழக்கமாக ரஜினிக்கு தமிழ் நடிகரை வில்லனாக போடாமல் ஹிந்தி நடிகர் அம்ரீஷ் பூரி ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டி விட்டு இருப்பார்.
டேனி டென்சோங்பா: 2010 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் அடித்த படம் தான் எந்திரன். இந்த படத்தில் ரஜினிகாந்,த் ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதன் இரண்டாம் பாகமாக 2.0 வெளியாகி அந்தப் படமும் ஹிட்டு அடித்தது. இந்த படத்தில் ரஜினி வம்சி கதாபாத்திரத்தில் விஞ்ஞானியா நடித்திருப்பார். இதில் ப்ரொபஷனராக ரஜினிக்கு வில்லன் வேடத்தில் நடித்த ஹிந்தி நடிகர் டேனி டென்சோங்பாக நடித்திருப்பார். இதில் ப்ரொபஷனராக ரஜினிக்கு வில்லன் வேடத்தில் நடித்த ஹிந்தி நடிகர் டேனி டென்சோங்பா சைலன்ட் கில்லர் ஆக மிரட்டி இருப்பார்.
நானா படேகர் : 2018 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் காலா. இந்த படத்தில் ரஜினிக்கு பாலிவுட் நடிகர் நானா படேகர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து அசத்து இருப்பார்.
நவாசுதீன் சித்திகி: ரஜினியின் 165 ஆவது படமான பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திகி நடித்திருப்பார். இதில் சிங்கார் சிங்க் கேரக்டரில் கொடூரமான தன்னுடைய வில்லத்தனத்தை தமிழ் ரசிகர்களுக்கு காண்பித்து மிரட்டி இருப்பார்.
சுனில் செட்டி: 2020 ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி மும்பை போலீஸ் கமிஷனர் ஆக முரட்டு விட்ட தர்பார் படத்தில் ஹரி சோப்ரா என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் சுனில் செட்டி தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை கச்சிதமாக வெளிக்காட்டி இருப்பார்.
இவ்வாறு இந்த 5 பாலிவுட் நடிகர்களும் ரஜினிக்கு வில்லனாக கைகோர்த்து அவருடைய படங்களுக்கு கூடுதல் பலம் சேர்த்தனர். அதிலும் ரஜினியின் தளபதி படத்தில் அம்ரீஷ் பூரி, கலிவரதன் கேரக்டரில் பிச்சு உதறி இருப்பார்.