படத்தில் கதை எவ்வாறு அமைந்திருந்தாலும் அவற்றில் தாய் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளுக்கே நல்ல வரவேற்பு உண்டு. அக்காலம் முதல் இக்காலம் வரை இவரின் படங்களில் இது போன்ற தாய் சென்டிமென்ட் இடம் பெற்றே தீரும்.
அம்மா பாசத்தை மையமாக கொண்டு வெளிவந்த ரஜினி படங்கள் பெரிய ஹிட் கொடுத்திருக்கிறது. அதுபோன்று அமைந்த ஐந்து படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
அன்னை ஓர் ஆலயம்: 1979ல் ஆர் தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அன்னை ஓர் ஆலயம். இப்படத்தில் ரஜினி, ஸ்ரீப்ரியா, நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் படத்தில் தன் தாயின் இறப்பிற்கு பின் பாசத்தை உணர்ந்து கொள்கிறார் ரஜினி. அதன் பிறகு தான் கூட்டி வந்த யானை குட்டியை அதன் தாய் யானையிடம் சேர்க்கும் படலத்தில் மீதி கதை சென்று இருக்கும். இப்படம் பார்ப்பவர்களை உருக்கத்தில் ஆழ்த்தியது என்றே கூறலாம்.
தீ: 1981ல் வெளிவந்த இப்படத்தை ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார். மேலும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்திருப்பார். ஒரு ஏழ்மை குடும்பத்தில் வளரும் இருமகன்கள் வெவ்வேறு வழியில் பயணிக்கிறார்கள். அப்பொழுது இருவர் இடையே ஏற்படும் வாக்குவாதத்தில் தாயின் தர்ம சங்கடத்தை உணர்த்தும் விதமாக இப்படம் அமைந்திருக்கும்.
தாய் வீடு: 1983ல் ரஜினி மற்றும் அனிதா ராஜ், சுகாசினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மேலும் இப்படத்தை ஆர் தியாகராஜன் இயக்கியுள்ளார். ஒரு கத்தியில் இருக்கும் துருப்பைக் கொண்டு புதையலை தேடும் கதையாக இப்படம் முழுக்க கொண்டு செல்லப்பட்டிருக்கும். இப்படத்தில் தாயின் பேச்சை மீறாதவர் போன்று ரஜினி நடித்திருப்பார்.
சிவா: 1989ல் வெளிவந்த இப்படத்தில் சோபனா, ரகுவரன், ரஜினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இரு நண்பர்களின் கதையாக கொண்டு சென்று இருந்தாலும் தன் நண்பனின் தாய் பாசத்தை உணர்வது போன்று ரஜினி நடித்திருப்பார்.
தளபதி: 1991ல் வெளிவந்த இப்படத்தில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த்சாமி, பானுப்ரியா ஆகியோர் நடித்திருப்பார்கள். மேலும் அனாதையாக இடம்பெறும் ரஜினி ஏழ்மை வாழ்க்கையை வாழ்ந்து வருவது போன்றும்,அதன் பின் இவர் தாய் பாசத்திற்கு ஏங்குவது போன்றும் கதை அமைந்திருக்கும். இறுதியில் தன் தாய்க்கு கொடுத்த சத்தியத்தை தவறாத மகனாய் நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார். இதுபோன்ற இவரின் படங்கள் நட்பை தாண்டி தாய் பாசத்தையே அதிகமாக உணர வைத்தது.