கலவரம் செஞ்சு வெற்றி பெற்ற 5 படங்கள்.. முதல் படத்திலேயே பூகம்பமான தனுஷ்

Actor Danush: எத்தனையோ வித்தியாசமான படங்கள் வெளிவந்து மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் ஒரு சில படங்கள் வெளிவந்த பொழுது அந்த படத்தின் கதையால் பல பிரச்சினைகள் வெடித்து அதற்கு எதிர்ப்புகளும் வந்திருக்கிறது. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி மிகப்பெரிய வெற்றியை நழுவி இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.

இது நம்ம ஆளு: இயக்குனர் பாலகுமாரன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு இது நம்ம ஆளு திரைப்படம் வெளிவந்தது. இதில் பாக்கியராஜ், ஷோபனா, மனோரமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பாக்யராஜ் படிப்பை முடித்த பின்பு அவருடைய அம்மாவின் கண் மருத்துவ செலவிற்காக பிராமணர் என்று பொய் சொல்லி வேலை பார்ப்பார். இப்படம் வெளியான சமயத்தில் அது எப்படி முடி திருத்துபவரை வைத்து பிராமணர் வீட்டு பெண்ணை திருமணம் செய்ததாக நீங்கள் காட்டி இருக்கீங்க என்று மிகவும் பிரச்சனையை உருவாக்கியது. ஆனாலும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

உயிர்: இயக்குனர் சாமி இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு உயிர் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்ரிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கணவரின் மறைவுக்கு பிறகு தனது கொழுந்தனை காதலிக்கும் பெண்ணை வைத்து கதை அமைந்திருக்கும். அதனால் இந்த படம் வெளிவந்த பிறகு பல சர்ச்சைகளை ஏற்படுத்தி அண்ணி என்பவர் அம்மாக்கு சமம் என்று மனதில் புதைந்திருக்கும் ஒரு விஷயத்தை இப்படி கொச்சைப்படுத்தும் விதமாக வெளிவந்திருக்கிறது என்று மிகப் பெரிய எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

பம்பாய்: இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு பம்பாய் திரைப்படம் வெளிவந்தது. இதில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கலப்புத் திருமணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அதாவது முஸ்லிம் இந்து திருமணம் மற்றும் மும்பை கலவரம் அங்கு இருக்கும் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனையை படமாக்கப்பட்டிருக்கும். இப்படம் வெளிவந்த பிறகு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

தேவர்மகன்: இயக்குனர் பரதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரேவதி, கௌதமி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது கிராமத்தில் ஏற்படும் ஜாதி பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அதனால் இப்படம் வெளிவந்த நேரத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சிறந்த தமிழ் திரைப்படம் என்ற விருதைப் பெற்றுக் கொடுத்தது.

துள்ளுவதோ இளமை: கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், ஷெரின், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். திரைப்படம் மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். அத்துடன் பள்ளி பருவத்தில் மாணவர்கள் செய்யும் செயல்களை படமாக்கியதால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து பூகம்பமாய் பிரச்சினை வெடித்தது. ஆனாலும் இப்படத்தின் மூலம் தனுஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.