சமுதாயத்தில் தனக்கு என்று சம்பாதித்து வைத்த பெயரை சினிமா மூலம் என்ட்ரி கொடுத்து கெடுத்துவிட்டார்கள். மறுபடியும் இவர்களால் அதே மரியாதையை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. அதிலும் ஒருவர் ரஜினி படத்தில் நடித்ததோட சினிமா கேரியரை முடித்துக் கொண்டார்.
நாஞ்சில் சம்பத்: இவர் சில படங்களில் நடித்ததன் மூலம் அரசியலில் கிடைக்காத வெற்றியை சினிமா மூலம் பெற்று விடலாம் கூறியிருக்கிறார். இதன் விளைவாக சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி நடித்த படங்கள் இவருக்கு தனி இடத்தை பெற்று கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். ஆனால் அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருக்க இடம் தெரியாமல் போய்விட்டார்.
பழ கருப்பையா: தமிழக அரசியல்வாதியும், எழுத்தாளரும் மற்றும் நடிகரும் ஆவார். இவர் அங்காடித்தெரு, சர்க்கார் போன்ற படங்களில் நடித்து பிரபலமானாலும் அடுத்தடுத்து இவரால் சினிமாவிற்கு பெரிய அளவில் வர முடியவில்லை. அரசியலில் பெற முடியாத புகழை சினிமாவில் பெற்று விடலாம் என்று நம்பிக்கையில் நுழைந்த இவருக்கு பெரிய வாய்ப்புகள் சொல்லும்படியாக அமையாமல் இருக்கிறார். இவர் கடைசியாக செம்பி படத்தில் ஒரு அரசியல்வாதியாக நடித்திருப்பார் ஆனால் அது விஜய் படத்தின் சர்க்கார் அளவிற்கு பெயர் கிடைக்கவில்லை.
சாலமன் பாப்பையா: இவர் புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ஆவார். இவர் இனிய தமிழ் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்த ஒரு பேச்சாளர். இவரின் பட்டிமன்றம் பொதுவாக சமூகத்திலும், இல்லங்களிலும் அன்றாட நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றத்தை நடத்துபவர். இவருக்கும் ஒரு ஆசை சினிமாவில் வந்து நடிக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் சிவாஜி என்ற பாஸ் படத்தில் ரஜினியோட சில காட்சிகளில் நடித்தார். அதன்பின் சினிமாவில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
லியோனி: இவர் ஒரு பட்டிமன்றத் சமூக விவாதங்களை தொகுத்து வழங்கக்கூடிய தொகுப்பாளர். இவர் பள்ளி ஆசிரியர், பேச்சாளர், நடிகர், அரசியல் ஆர்வலர் ஆவார். இவரது பேச்சு பொதுவாக நையாண்டி மற்றும் நகைச்சுவையாக கருத்துக்களை வெளியிடுவார். இவர் கங்கா கௌரி படங்களில் மூலம் சினிமாவிற்கு நுழைந்தார். இதனை தொடர்ந்து இவரால் சினிமாவில் பயணிக்க முடியாமல் போய்விட்டார்.
பட்டிமன்ற ராஜா: இவர் பட்டிமன்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர். சாலமன் பாப்பையா நடத்தப்பட்ட விவாத பேச்சுப் போட்டிகளில் இவர் ஆற்றிய உரைகள் உலகெங்கிலும் உள்ள தமிழ் குடும்பங்கள் மத்தியில் இவரை பிரபலமாக்கியது. இவர் சிவாஜி என்ற பாஸ் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் பட்டிமன்றத்தின் மூலமாக கிடைத்த மரியாதையை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை போய்விட்டது.