தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் காமெடி நடிகருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் தான் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இவர் 1000 படங்களுக்கு மேல் பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அத்துடன் இன்றும் இவரை பற்றி பேசப்படும் ஒரு நல்ல நடிகராக மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறார். இவர் அப்படி நடித்து நங்கூரமாய் மனதில் நின்ற படங்களை பற்றி பார்க்கலாம்.
சர்வர் சுந்தரம்: கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 1964ஆம் ஆண்டு சர்வர் சுந்தரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் நாகேஷ், முத்துராமன், மேஜர் சுந்தரராஜன், கே.ஆர் விஜயா மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் நாகேஷ் சர்வராக வேலை பார்க்கும் நபராக இருப்பார். ஆனால் இவருக்கு சினிமாவில் ஹீரோவாக மாற வேண்டும் என்பது தான் ஆசை இதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் நாகேஷின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு திரைப்படமாக இன்றும் பேசப்பட்டு வருகிறது.
எதிர்நீச்சல்: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1968ஆம் ஆண்டு எதிர்நீச்சல் திரைப்படம் வெளிவந்தது. இதில் நாகேஷ், முத்துராமன், சௌகார் ஜானகி, சுந்தரராஜன் மற்றும் மனோரமா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் நாகேஷ் மாது என்ற கேரக்டரில் அவருடைய வாழ்க்கைக்காகவும், கல்விக்காகவும் பல குடும்பங்களைக் கொண்ட வீட்டில் ஒற்றைப்படை வேலைகளை செய்து வரும் சேவகனாக நடித்திருப்பார். இதில் இவருடைய கதாபாத்திரத்தை பார்ப்பதற்கு பாவமாகவும், எதார்த்தமாகவும் இருக்கும். ஆனால் அதுவே இப்படத்தின் வெற்றியாக அமைந்தது. இப்படம் இவருடைய சினிமா கேரியரில் மிக திருப்புமுனையாக அமைந்தது. இப்பொழுதும் கூட பார்த்து ரசிக்கும் படியாக இப்படம் இருக்கிறது.
மைக்கேல் மதன காமராஜன்: சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், ஊர்வசி, ரூபிணி, குஷ்பூ மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சில காட்சிகளை தவிர மற்ற காட்சிகளை பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக இருக்கும். இதில் நாகேஷ் அவினாசி என்ற கேரக்டரில் சற்று வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி அனைவரும் மனதையும் கவர்ந்திருப்பார்.
நம்மவர்: கே.எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு நம்மவர் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், கௌதமி, நாகேஷ் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் காலேஜில் நடக்கும் கலவரத்தை சரி செய்து அதை ஒழுங்குபடுத்தும் விதமாக இப்படத்தின் கதை அமைந்திருக்கும். இதில் நாகேஷ் கல்லூரியின் பேராசிரியராக நடித்திருப்பார். இந்த படத்தில் கமல் நாகேஷிடம் தனிப்பட்ட முறையில் நீங்க நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நடிக்கிறீர்களா என்று கேட்கிறதற்கு நாகேஷ் நான் தான் உங்களிடம் கேட்க வேண்டும் இதில் இந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கட்டுமா என்று சொல்லி கேட்டிருக்கிறார்.
திருவிளையாடல்: ஏபி நாகராஜன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு திருவிளையாடல் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி, சாவித்திரி, முத்துராமன் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் திருவிளையாடல், புராணத்தில் இருக்கிற 64 தொகுப்புகளில் நான்கு தொகுப்புகளை மட்டும் வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார்கள். இதில் நாகேஷ் தருமி என்கிற ஒரு ஏழை புலவனாக நடித்து இவருடைய குறும்பு கலந்த நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.