தென்னிந்திய வெற்றி படங்களை பாலிவுட் இல் ரீமேக் செய்து வெளியிடும் பழக்கம் சமீபத்தில் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த முயற்சிகள் பெரும்பாலும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைகின்றன. காரணம், அசல் படங்களில் இருந்த தனித்துவம் மற்றும் கதையின் வலிமை. அவற்றில் சில
தெறி மற்றும் பேபி ஜான்: அட்லீ இயக்கத்தில், விஜய் நடித்த “தெறி” திரைப்படம், 2016 ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் ₹150 கோடி வசூலித்த இந்த படம், மாபெரும் ஹிட். இதன் இந்தி மறு ஆக்கம் “பேபி ஜான்”, வருண் தவான் நடிப்பில் 2025 டிசம்பர் 25 அன்று வெளியானது. ஆனால், ₹61 கோடி வசூலித்த இது, மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
மும்பை போலீஸ் மற்றும் தேவா: பிரித்விராஜ் நடித்த மலையாளப் படமான “மும்பை போலீஸ்”, 2013 மே 3 அன்று வெளியானது. படத்தின் திருப்பங்களும், சிக்கலான கதையமைப்பும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த கதையின் இந்தி பதிப்பு “தேவா”, ஷாஹித் கபூர் நடிப்பில் 2025 ஜனவரி 31 அன்று வெளியானது. ஆனால், ₹56.32 கோடி மட்டுமே வசூலித்த இந்த படம், தனது பட்ஜெட்டையே மீட்டுக்கொள்ள முடியாமல் போனது.
லவ் டுடே மற்றும் லவ்யாப்பா: பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே”, 2022 நவம்பர் 4 அன்று வெளியானது. ₹105 கோடி வசூலித்த இந்த படம், பிளாக்பஸ்டர். இதன் இந்தி மறு ஆக்கம் “லவ்யாப்பா”, குஷி கபூர் மற்றும் ஜுனைத் கான் நடிப்பில் 2025 பிப்ரவரி 7 அன்று வெளியானது. ₹8-12 கோடி மட்டுமே வசூலித்த இது, மிக மோசமான வரவேற்பை பெற்றது.
OTT வெளியீடு : தெறி 2017 அக்டோபர் 18-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. “பேபி ஜான்”, 2025 பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் பிரைமில் உள்ளது. “மும்பை போலீஸ்” டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது, ஆனால் “தேவா” 2025 மார்ச் 28 முதல் நெட்ஃபிக்ஸில் வெளியாகியது. “லவ் டுடே” நெட்ஃபிக்ஸில் 2022 டிசம்பர் 2 அன்று வந்தது, அதேபோல் “லவ்யாப்பா” 2025 ஏப்ரல் 4 முதல் ஜியோசினிமாவில் உள்ளது.
இந்த ரீமேக் படங்களின் தோல்வி, அசல் படங்களின் தனித்துவத்தையும், அவற்றின் தரத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஒரு திரைப்படம் வெற்றி பெற, கிராபிக்ஸ் அல்ல, கதையம்சம் முக்கியம் என்பதை இந்த பாக்ஸ் ஆபிஸ் முடிவுகள் தெளிவாக உணர்த்துகின்றன. இவை பாலிவுட்டை சிந்திக்க வைத்து, புதிய படைப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதே நம்பிக்கை.