தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் வெற்றிப்படங்களை உருவாக்கியவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். அவரது படங்களில் கஜினி, துப்பாக்கி, கத்தி போன்றவை பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆனால் தர்பார்,சிக்கந்தர் போன்ற படங்கள் தோல்வியைச் சந்தித்தது.
சிக்கந்தர் திரைப்படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால், ரசிகர்கள் பெரும் விரக்தி அடைந்தனர். இந்த தோல்வி குறித்து பல வதந்திகளும் வெளிவந்தன. இது குறித்து இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் தோல்விக்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, “சிக்கந்தர் தோல்விக்குக் காரணம் சல்மான்கான் தான்” என்று கூறியுள்ளார். சல்மான்கானின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பகலில் மற்றும் வெளியிடங்களில் படப்பிடிப்பு எடுக்க முடியவில்லை. அதனால் பெரும்பாலும் கிரீன் மேட், சிஜி தொழில்நுட்பத்தின் மூலமே காட்சிகள் எடுக்கப்பட்டன.
பகல் காட்சிகளுக்காக இரவில் செட் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் படக்குழுவிற்கு கூடுதல் சிரமங்கள் உருவாயின. அதோடு சல்மான்கான் அடிக்கடி தாமதமாக வந்ததால் வேலைகள் மேலும் தடைபட்டன.
இவை அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாது என அவர் கூறியுள்ளார். இன்னும் சொன்னால் பிறர் வருந்துவது போல் ஆகிவிடும் என்றார். இதன் மூலம் பல விஷயங்களை அவர் உள்ளுக்குள் அடக்கி இருப்பது வெளிப்படுகிறது.
தற்போது முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த முறை மீண்டும் ரசிகர்களிடம் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.