ரெட் லைட் ஏரியாவில் வளர்ந்தவர், சொந்தமாக ரயில் வைத்திருந்த பாடகி.. யார் தெரியுமா?

இந்தியாவில் இன்றைக்கு ஏராளமான பாடகிகள் பிரபலமாக உள்ளனர். அவர்கள் குறித்த தகவல்களை சினிமா ரசிகர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். இந்திய அளவில் எல்லோருக்கும் விருப்ப பாடகி, ஸ்ரேயா கோஷல், நேஹா கக்கார், சித்ரா என்று பலர் உள்ளனர்.

இந்தியாவில் இன்றைக்கு ஏராளமான பாடகிகள் பிரபலமாக உள்ளனர். அவர்கள் குறித்த தகவல்களை சினிமா ரசிகர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னாள், ஒரு கோடீஸ்வரி பாடகி இருந்தார். அவரை பற்றி பலருக்கும் தெறியாது என்பதே உண்மை

1902 ஆம் ஆண்டு தனது முதல் பாடலை பதிவு செய்து பின்னாளில் சொத்துக்களை குவித்த பாடகியாக புகழ் பெற்ற கவுகர் ஜான் தான் அந்த கோடீஸ்வர பாடகி. இவர் சிறுவயதில், ரெட் லைட் ஏரியாவில் வளர்ந்தவர். பல கஷ்டங்களை வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.

சொந்தமாக ரயில்

கவுகர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த தந்தைக்கும் இந்திய தாய்க்கும் மகளாக பிறந்தவர். அவரது இளம் வயது வாழ்க்கை ஏராளமான சோகங்களை கொண்டது. ரெட் லைட் ஏரியாவில் வளர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தனியாக விளக்க தேவை இருக்காது. குழந்தை பருவத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட கவுகர் ஜான், ரெட் லைட் ஏரியாவில் இருக்கும் ஒரு விடுதியில்தான் வளர்ந்தார்.

அங்கு அந்த மாதிரி, தொழில் செய்வோர் கவுகரை அரவணைத்துக் கொண்டனர். அங்கு அவர் பாடல் பாட கற்றுக்கொண்டார். 1902 மற்றும் 1920 க்கு இடையில், கவுகர் ஜான் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 600 பாடல்களை பாடியுள்ளார். அன்றைய காலகட்டத்திலேயே ஒரு பாடலுக்கு கவுகர் ஜான் ரூ. 3 ஆயிரம் வரை வசூலித்ததாக தகவல்கள் உள்ளது.

இன்றே 3000 ஒரு பெரிய அமெண்டாக தான் உள்ளது. அப்போது அந்த காலத்தில் கேட்கவே வேண்டாம்.. இன்று கோடிகளில் சம்பளம் எப்படியோ, அப்படியே இந்த தொகையும் பார்க்க பட்டிருக்கும். மன்னர்களால் கச்சேரிக்கு அழைக்கப்படும் இடங்களில் தன்னுடைய தனிப்பட்ட ரயிலில்தான் கவுகர் செல்வாராம். இவருக்கு என்று தனி ரயில் வைத்திருந்தது குறிப்பிடதக்கது.

Leave a Comment