வெற்றி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை சுஹாசினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக படங்களில் நடிக்காத சுகாசினி தற்போது தன் கணவருக்கு துணையாக அவருடைய தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வைரமுத்துவை படங்களில் புக் செய்ய வேண்டாம் என்று மணிரத்தினத்திற்கு கட்டளை போட்டுள்ளாராம். மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
வரலாற்று காவியமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பாடல்களை எழுதுவதற்காக வைரமுத்துவை அணுக மணிரத்னம் முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் சுஹாசினி அவர் வேண்டாம் என்று ஒரேடியாக மறுத்திருக்கிறார் ஏனென்றால் வைரமுத்து சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
கடவுள் ஆண்டாள் பிரச்சனை, ஏ ஆர் ரகுமானுடன் கருத்து வேறுபாடு இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் பாடகி சின்மயி கொடுத்த மீ டூ புகார் அவருடைய பெயரை டேமேஜ் ஆகியது. அதை தொடர்ந்து அவர் மீது எக்கச்சக்க புகார்கள் வந்தது.
இதனால் அவருக்கு சில வாய்ப்புகளும் பறி போனது. அதில் ஒன்றுதான் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த பிரச்சினையின் காரணமாகத்தான் சுஹாசினி, மணிரத்தினத்திடம் வைரமுத்து பாட்டெழுத வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவரை இந்த படத்தில் புக் செய்தால் ஏதாவது பிரச்சனை வந்துவிடும். அது பொன்னியின் செல்வனுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று மணிரத்தினத்திற்கு அவர் அழுத்தம் கொடுத்திருக்கிறார். அதனால் தான் மணிரத்னம் வைரமுத்துவை இந்த படத்திலிருந்து கழட்டி விட்டதாக கூறுகின்றனர்.