எம்ஜிஆர் வளர்த்துவிட்ட பவுன்சர்ஸ்.. 5 மெய்க்காப்பாளர்களையும் கடைசிவரை அரவணைத்த புரட்சித்தலைவர்

50 வயதுக்கு மேல் ஒருவரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அடித்தது என்றால் அது புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மட்டும்தான். சினிமாவில் இவருக்குக் கிடைத்த ரசிகர் கூட்டத்தினால் அரசியலிலும் தனக்கென தனி இடம் வகுத்தார்.

இவரை நம்பிய மக்களுக்கு பல நல்ல திட்டங்களையும் செய்த எம்ஜிஆர், அவரிடம் வேலை பார்த்த பவுன்சர்களையும் வளர்த்து விட்டிருக்கிறார். எம்ஜிஆரிடம் முக்கியமான மெய்க்காப்பாளர்களாக 5 பேர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் எம்ஜிஆருக்கு பாதுகாப்பாகவும் அரணாகவும் அவருடைய நிழலாகவே இருந்துள்ளனர்.

இதனால் எம்ஜிஆரும் அவர்களது வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு முதல் ஆளாகப் போய் நிற்பாராம். அந்த 5 பவுன்சர்களின் வீட்டில் நடக்கும் அனைத்து விழாக்களுக்கும் வேண்டிய பணம் மற்றும் பொருள் உதவியையும் வழங்குவாராம்.

மேலும் அவர்களது வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வாங்கித் தருவது மட்டுமல்லாமல் அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி விளையாடுவாராம். அதிலும் வீராசாமி என்னும் பவுன்சருக்கு ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க உதவி செய்துள்ளார்.

அந்த வீராசாமி என்னும் நபர் ஹோட்டல் ஆரம்பித்து மிகக்குறைந்த விலைக்கு அதிக லாபம் பார்க்காமல் சாப்பாடு போட்டிருக்கிறார். இதனால் பிறருக்கு உதவும் மனதுடன் ஹோட்டலை நடத்திய வீராசாமியின் நல்ல உள்ளம் எம்ஜிஆரை வியப்படைய வைத்தது.

ஆகையால் எம்ஜிஆர் வீராசாமிக்கு இன்னொரு ஹோட்டலும் ஆரம்பித்து 100 பேருக்கு மேல் சாப்பிடும் படி வசதி செய்து கொடுத்துள்ளாராம். இப்படி எம்ஜிஆர் தன்னிடம் இருந்த பவுன்சர்ஸ் வாழ்க்கையிலும் விளக்கேற்றி வைத்திருக்கிறார்.