ஓடிடி உலகம் புதிய படங்களும் வித்தியாசமான வெப் சீரிஸ்களும் கொண்டு ரசிகர்களை கவர தயாராக இருக்கிறது. ஆக்ஷன், ரொமான்ஸ், த்ரில்லர் போன்ற படங்களை தவற விடாமல் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம்கள் ரசிகர்களுக்கு nonstop எண்டர்டெயின்மென்ட் தருகின்றன.
ஆகஸ்ட் 19ம் தேதி Mission Impossible: The Final Reckoning ஆங்கிலம் + பல மொழிகளில் பிரைம் வீடியோ Rent ல் வந்திருக்கிறது. அதோடு The Bad Guys, Elio, Familiar Touch, House on Eden ஆகிய ஆங்கில படங்களும் அதே நாளில் பிரைம் வீடியோ Rent ஆப்ஷனில் கிடைக்கின்றன.
ஆகஸ்ட் 20-ம் தேதி ஸ்ட்ரீமிங்கில் காதலுக்கும் சஸ்பென்ஸுக்கும் இடம் உண்டு. The Map That Leads To You ஆங்கிலம் + பல மொழிகள் பிரைம் வீடியோ-வில் வருகிறது. அதோடு பிரேசிலியன் சீரிஸ் Rivers Of Fate நெட்ஃபிளிக்ஸ்-ல் ஸ்ட்ரீமிங் ஆரம்பமாகிறது. வெளிநாட்டு கதைகள், அங்கேயுள்ள கலாசாரங்களோடு, பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவம் தரப்போகிறது.
ஆகஸ்ட் 21ஆம் தேதி இன்னும் அதிக சுவாரஸ்யம் The Alto Knights ஜியோ ஹாட்ஸ்டார் ல் ஆங்கிலத்தில் வெளியாகிறது. அதோடு நெட்ஃபிளிக்ஸ்-ல் பிரிட்டிஷ் சீரிஸ் Hostage, ஜெர்மன் படம் Fall For Me, அதிரடி நிறைந்த Welcome To Sudden Deadth, One Hit Wonder, தாய்லாந்து படம் Gold Rush Gang எல்லாம் ஒரே நாளில் வெளியாகிறது.
ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழ் ரசிகர்களுக்கு பெரும் திருவிழா தலைவன் தலைவி தமிழ் + பல மொழிகள் பிரைம் வீடியோ-வில் வருகிறது. அதே நாளில் மாரீசன் (தமிழ் + பல மொழிகள்) நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகிறது. தெலுங்கில் Kothapallilo Okappudu ஆஹா வீடியோ-வில் வருகிறது.
அதே நாளில் ஹாலிவுட் ரசிகர்களுக்காக F1 The Movie பிரைம் வீடியோ ரெண்ட் ஆப்ஷனில் வெளியாகிறது. அதோடு PeaceMaker Season 2 ஜியோ ஹாட்ஸ்டார்-இல், Hot Milk ம்யூபி-ல், Aema (கொரியன் சீரிஸ்) நெட்ஃபிளிக்ஸ்-ல், Abandoned Man துருக்கிய படம் நெட்ஃபிளிக்ஸ்-ல், Night of the Zoopocalypse பீக்காக்-ல் என பத்து படங்களும் சீரிஸ்களும் ரசிகர்களை கவர போகின்றன.
ஆகஸ்ட் 23ம் தேதி நெட்ஃபிளிக்ஸ்-ல் On Swift Horses எனும் ஆங்கில படம் வெளியாகிறது. தனித்துவமான கதைக்களத்துடன் வந்திருக்கும் இந்த படம் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 24-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ்-ல் The Killer எனும் ஆங்கில படம் வெளியிடப்படுகிறது. த்ரில்லர், ஆக்ஷன், எமோஷன் கலந்து வரும் இந்த படம், வார இறுதியில் பார்வையாளர்களை கவரும் வகையில் இருக்கும். இப்படியாக, ஒவ்வொரு நாளும் புதிய புதிய படங்களும் சீரிஸ்களும் வெளியாகி, ஓடிடி ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது