டி ராஜேந்தர் மற்றும் பாக்யராஜ் இவர்களுக்குள் பெரிய ஒற்றுமையை இருக்கிறது என்று சொல்லலாம். அதாவது இவர்கள் இருவருமே மற்றவர்களின் தயவு இல்லாமல் ஒரு படத்தை இயக்கவும், பாடல் எழுதவும், இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் பல திறமைகளை வைத்துக்கொண்டு சினிமாவின் உச்சிக்கு சென்று பெரிய புகழை பெற்றவர்கள்.
இதே போல் இவர்களின் திறமைக்கு சமமாக ஒருவர் இருந்தாலும் அவரால் புகழின் உச்சிக்கு செல்ல முடியவில்லை. இவருக்கு சினிமா வாழ்க்கை பெரிதும் கை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் திறமைகள் எவ்வளவுதான் இருந்தாலும் அதை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் நிலைமை பரிதாபமாக போய்விடும். அதற்கு எடுத்துக்காட்டாக இவரை குறிப்பிடலாம்.
அவர் வேறு யாரும் இல்லை இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் தான். இவருக்கு திறமைகள் அதிகமாய் இருந்தாலும் இவர் இளையராஜாவின் நிழலில் இருந்ததுனால் என்னமோ பெரிய உச்சத்தை அடையவில்லை. இவருக்கு ஓரளவு புகழ் கிடைத்தாலும் இவருடைய திறமைக்கு தகுந்தார் போல் அவருடைய வளர்ச்சி மிகவும் கம்மிதான்.
இவருக்கு திறமைகள் எவ்வளவு இருக்கிறதோ அதற்கேற்றார் போல் நிறைய சர்ச்சைகளில் கருத்துக்களை தெரிவிப்பது மூலம் அவ்வப்போது மாட்டியும் கொள்வார். அது மட்டும் அல்லாமல் சினிமாவை தவிர அரசியலிலும் இருந்து வருகிறார். இதிலும் நிறைய கருத்துக்களை கூறி பிரச்சினைகளில் சிக்கி இருக்கிறார்.
இதனால் இவருடைய முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்தாமல் இவருடைய சினிமா வாழ்க்கை பரிதாபமாகி போய்விட்டது. இதற்கு முழு காரணமே இவருடைய துடுக்கான பேச்சு தான். இளையராஜாவுக்கு இருக்கிற புகழின் பாதி அளவு கூட இவர் பெறவில்லை என்பது தான் இவருடைய பரிதாபமான நிலைமை.
இவரைத் தொடர்ந்து இவரது பசங்களான இரண்டு பேர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி. இவர்கள் இருவருமே அப்பா அடையாத புகழை அடைந்தே தீர வேண்டும் என்று முழு முயற்சியுடன் சினிமாவில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களாவது கங்கை அமரன் தொட முடியாத புகழை இவர்கள் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.