ஓடிடி-யை கலக்கி வரும் சூப்பர் ஸ்டாரின் டாப் ஏழு படங்கள்.. இப்பவும் கொண்டாட இதுதான் காரணம்

தென்னிந்திய சினிமாவின் உச்சநிலை நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது திரையுலக பயணத்தில் பல பிளாக்பஸ்டர் படங்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். இங்கே ரஜினியின் டாப் 7 மாஸ் ஹிட் படங்களையும் அவை எந்த ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகின்றன என்பதையும் பார்க்கலாம்.

1991ல் வெளியான தளபதி திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி மம்முட்டி அரவிந்த்சாமி நடிப்பில் உருவானது. வெங்கடேசன் தயாரித்த இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தற்போது படம் YouTube இல் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.

1995ல் வெளியான பாட்ஷா சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன் நடிப்பில் உருவான கல்ட் கிளாசிக். ஏ.எம். ரத்னம் தயாரித்து, ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இப்படம் Amazon Prime Video வில் கிடைக்கிறது.

படையப்பா 1999 ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடித்த இந்த திரைப்படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்து, ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். தற்போது அது அமேசான் பிரைம் வீடியோவில் கிடைக்கிறது.

2007ல் வெளியான சிவாஜி தி பாஸ் திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்தனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இப்படம் ZEE5 மற்றும் Amazon Prime Videoவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

2010ல் வெளியான எந்திரன் சங்கர் இயக்கத்தில் ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவான சைஃபை அதிரடி படம். கலாநிதி மாறன் தயாரித்து, ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இப்படம் Sun NXT மற்றும் Amazon Prime Video வில் காணலாம்.

2019-ல் வெளியான பேட்ட மற்றும் 2023ல் வெளியான ஜெயிலர் இரண்டும் ரஜினியின் மாஸ் வரவேற்பை மீண்டும் நிரூபித்தன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட Jio Hot star இல், நெல்சன் இயக்கிய ஜெயிலர் Amazon Prime Video வில் ஸ்ட்ரீமிங் ஆகின்றன.