ராமராஜன் இயக்கத்தில் வெளிவந்த 6 படங்கள்.. ஹீரோனு நினைச்சா டைரக்டர் வேலையும் பார்த்துருக்காரு நம்ம தலைவரு

தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் ராமராஜன். கிராமத்து மக்களே தனது நடிப்பின் மூலம் அடிமையாக்கியவர் என்றே கூறலாம். மீனாட்சி குங்குமம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், அதைவிட சுவாரசியம் 10 படங்களை இயக்கி உள்ளார் என்பது தான். தற்போது அவர் இயக்கி வெற்றி பெற்ற படங்களின் வரிசைகளை பார்க்கலாம்.

மண்ணுக்கேத்த பொண்ணு:

ராமராஜன், கவுண்டமணி, செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில், 1985-ல் வெளிவந்த படம் மண்ணுக்கேத்த பொண்ணு. இப்படத்திற்கு கங்கைஅமரன் இசை அமைத்திருப்பார். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது, படம் கிட்டத்தட்ட 100 நாட்களை தாண்டி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அம்மன் கோவில் வாசலிலே:

ராமராஜன் நடித்த இயக்கிய படம் அம்மன் கோவில் வாசலிலே. ராமராஜன், சங்கீதா, மணிவண்ணன், செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1996ல் வெளிவந்த படம். சிற்பி இந்த படத்திற்கு இசை அமைத்திருப்பார். ராமராஜனை பொறுத்தவரை படம் ஹிட்டானது ஒருபுறமிருந்தாலும், பாடல்கள் மற்றொருபுறம் பட்டிதொட்டியெல்லாம் தெறிக்க விட்டுவிடுவார். அந்த அளவிற்கு பொருத்தமாக அமையும், இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது பாக்ஸ் ஆபீஸ் வசூல் படைத்தது.

நம்ம ஊரு ராசா:

ராமராஜன், சங்கீதா நடிப்பில் 1996ல் வெளிவந்த படம் நம்ம ஊரு ராசா. இந்த படத்திற்கும் சிற்பி இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.

கோபுர தீபம்:

ராமராஜன், சுகன்யா, சௌந்தரராஜன், செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1997 இல் வெளிவந்த படம் கோபுர தீபம் . அன்றைய காலகட்டத்தில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்தது மட்டுமில்லாமல், அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஒரு நடிகனை தாண்டி தான் ஒரு இயக்குனர் என்பதை தமிழ் சினிமாவுக்கு நிரூபித்து படம் என்றே கூறலாம்.

விவசாயி மகன்:

எப்போதுமே கிராமத்து மக்களை தனது நடிப்பால் அடிமையாக்கி உள்ள ராமராஜன், ஒரு விவசாயியின் மகனாக நடித்திருப்பார். இந்த படத்தில் ராமராஜன் ஜோடியாக தேவயானி நடித்திருப்பார், கே ஆர் விஜயா, வடிவேலு போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

சீறிவரும் காளை:

ராமராஜன், அபிதா, மன்சூரலிகான், ஆனந்தராஜ், மனோரமா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2001ம் வருடம் வெளிவந்த படம் சீறிவரும் காளை. சேது படத்தின் மூலம் அறிமுகமான அபிதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். எப்போது போல பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க நாயகனாக இந்த படத்தில் ராமராஜன் நடித்திருப்பார்.

இப்படி தனது நடிப்பையும் தாண்டி,  இயக்கத்தில் கவனம் செலுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை பெற்று விட்டார் ராமராஜன். தற்போது அரசியல், குடும்ப வாழ்க்கை என்று சினிமாவை ஒதுக்கி வைத்து விட்டார். ஆனாலும் கூட அவரது படம் டிவிகளில் போட்டால் டிஆர்பி எகிற தான் செய்கிறது.