சினிமாவில் எத்தனையோ நல்ல படங்கள் மற்றும் வரலாற்றுப் படங்கள் வெளிவந்திருந்தாலும் சில படங்களை பார்க்கவே முடியாத அளவிற்கு ஒரு சில படங்கள் அமைந்திருக்கும். இவ்வளவு மோசமாக படங்கள் இருக்கிறது என்று தலையில் அடித்துக் கொண்டு முகம் சுளிக்க வைத்த படங்கள் சில இருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.
மிருகம்: சாமி இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு மிருகம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஆதி, பத்மப்ரியா மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தான் ஆதி ஹீரோவாக தமிழில் அறிமுகமான முதல் படம். இவர் நடித்த முதல் படத்திலேயே கொஞ்சம் கூட யோசிக்காமல் முகம் சுளிக்கிற மாதிரி ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். பல பெண்களுடன் தவறாக நடந்ததால் அவர் உயிர் கொல்லி நோயால் அவதிப்பட்டு வருவதை படமாக எடுக்கப்பட்டிருக்கும். மேலும் இப்படம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக் கூடிய படமாக இருக்காது.
சிந்து சமவெளி: சாமி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி திரைப்படம் வெளிவந்தது. இதில் ஹரிஷ் கல்யாண், அமலாபால் மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதுதான் அமலாபால் நடித்த முதல் படமாகும். இதில் இவர் நடித்த முதல் படமே பார்க்கவே சகிக்காது அந்த அளவுக்கு கதை அமைந்திருக்கும். இதில் அமலாபால் மாமனாரிடம் தவறான முறையில் நடந்து கொள்வார். இப்படத்தை பார்ப்பதற்கு அந்த அளவுக்கு கன்றாவியாக இருக்கும்.
கல்யாண சமையல் சாதம்: ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு கல்யாண சமையல் சாதம் திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரசன்னா, லேகா வாஷிங்டன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பிரசன்னாவின் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு திருமணத்தில் பல சவால்களை எதிர்கொள்ளும் விதமாக இப்படம் அமைந்திருக்கும். இதில் பிரசன்னா முதலிரவை நினைத்து பயந்து ஓடும் கேரக்டரில் நடித்திருப்பார்.
காதல் கதை: வேலு பிரபாகரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு காதல் கதை திரைப்படம் வெளிவந்தது. இதில் வேலு பிரபாகரன், ஷெர்லி தாஸ், ப்ரீத்தி ரங்கயானி, பாபிலோனா மற்றும் ஸ்டெஃபி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஒரு சர்ச்சைக்குரிய படமாக வெளிவந்தது. அதிலும் மிகவும் கொடூரமான விஷயங்களை உள்ளடக்கிய படமாக இருக்கும்.
உயிர்: சாமி இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு உயிர் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஸ்ரீகாந்த், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சங்கீதா நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார். அதாவது இவருடைய கணவரை இழந்ததற்கு பிறகு வீட்டில் இருக்கும் கொழுந்தன் மேல் ஆசைப்படும் ஒரு மோசமான கேரக்டரில் நடித்திருப்பார். இதில் கொழுந்தன் வேறு ஒருவரை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் அவர்களை பிரிக்கும் முயற்சியில் இக்கதை அமைந்திருக்கும்.