டிரைலர் வெளிவந்தும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் 6 படங்கள்.. ரீ என்ட்ரி டாப் ஸ்டார் க்கு வந்த சோதனை

பல தமிழ் படங்கள் ட்ரைலர் பாடல்கள் வெளியாகியும் பல ஆண்டுகளாக தியேட்டரில் வெளி வராமல் காத்திருக்கின்றன. அவற்றில் சில முக்கியமான படங்களைப் பற்றிய தகவல்கள் இங்கே.

மாளிகை தில் சத்யா இயக்கத்தில் ஆண்ட்ரியா கார்த்திக் ஜெயராம் நடித்த இந்த படத்தின் ட்ரைலர் 2021 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் ஹிந்தியில் வெளிவந்தது. ஆனால் சில காரணங்களால் தமிழில் இதுவரை ரிலீஸ் செய்யப்படவில்லை.

சேஸ் விலோக் ஷெட்டி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் ரைசா நடித்த இந்த படத்தின் ட்ரைலர் 2021 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆனால் சில காரணங்களால் இதுவரை இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை.

விண்ணோடும் முகிலோடும் சேரன் இயக்கத்தில் காதல் இளவரசன் பிரசாந்த் நடிப்பில் பெரிய பட்ஜெட் படமாக தயாராகி பாடலும் வெளிவந்தது. ஆனால் சில காரணங்களால் இதுவரை இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை.

டைட்டானிக் காதலும் கவுந்து போகும் 2020 ஆம் ஆண்டு ஜானகிராம். என் இயக்கிய நகைச்சுவை தமிழ் திரைப்படம். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கலையரசன், ஆனந்தி நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இன்னும் இந்த படம் வெளிவரவில்லை.

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இந்த படத்தில் சன் மியூசிக் புகழ் ஆனந்த கண்ணன் ஹீரோவாக நடித்திருந்தார். இது ஒரு சிறிய பட்ஜெட் படம் என்பதால் தியேட்டர் கிடைக்காமல் இப்பொழுது வரை ரிலீஸ் செய்யவில்லை.

கண்ணாடி கார்த்திக் ராஜு இயக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஆலியா சிங் ஆகியோர் கண்ணாடி திரைப்படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்துள்ளனர். படத்தின் டீஸர் 2019ல் வெளியானது. இந்த படம் தெலுங்கில் 2019ல் வெளிவந்தது. ஆனால் தமிழில் இதுவரை தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை.