சுந்தர் C இயக்கத்தில் தூள் கிளப்பிய 6 ஹிட் படங்கள்.. 95-ல மனைவிக்காக கொடுத்த ஹிட்

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனராக நின்றவர் சுந்தர் சி. அவரது படங்கள் பெரும்பாலும் நகைச்சுவை, அதிரடி மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியவர், பல ஹிட் படங்களை தமிழ் திரைக்கு வழங்கியுள்ளார். அவற்றில் சில பார்க்கலாம்.

முறை மாமன் – 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இது சுந்தர் சி இயக்குநராக அறிமுகமாகிய படம் ஆகும். ஜெயராம் மற்றும் குஷ்பூ முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம், காமெடியில் சிறந்து விளங்கி, வெற்றிபெற்றது.

அருணாசலம்-1997 ல் ரஜினி நடித்த இந்த படம் சமூக சிந்தனை கலந்த மெசேஜுடன் கூடிய மாஸ் திரைப்படமாக ரசிகர்களை கவர்ந்தது.சுந்தர் சியின் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகும் இது.

அன்பே சிவம் 2003 ல் கமல்ஹாசன், மாதவன் நடிப்பில் வெளியான இந்த படம் சுந்தர் சியின் கேரியரில் மிக முக்கியமான படம். மனித நேயம், தத்துவம், உணர்வுகள் அடங்கிய இந்த படம் விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்டது.

வின்னர் 2003 – இல் பிரசாந்த், வடிவேலு நடித்த இந்த படம் நகைச்சுவை மற்றும் காதல் கலந்து முழுக்க முழுக்க பார்வையாளர்களை சிரிக்க வைத்தது. வடிவேலுவின் காமெடி சீன்கள் இன்று வரை வைரலாகவே இருக்கின்றன.

கலகலப்பு 2012 –ல் சிவா, விமல் , அஞ்சலி , ஓவியா நடிப்பில் வெளிவந்த இந்த படம் பேய் இல்லத்தில் நடக்கும் சினிமா திருப்பங்களும், காமெடியும் கலந்த படமாக இது குடும்ப ரசிகர்களிடம் பிடித்தமானதாக மாறியது. இந்த படத்தின் வெற்றி, அதன் சீக்வெல் உருவாக காரணமாக இருந்தது.

அரண்மனை 2014 – ல் சுந்தர் சி, ஹன்சிகா, ஆண்ட்ரியா நடிப்பில் பேய் கதையுடன் கலந்த ஹாரர் காமெடி ஜானரில் மிகப்பெரிய ஹிட் ஆன படம். இந்த வெற்றியைத் தொடர்ந்து பல பாகங்கள் வெளிவந்தன.

மொத்தமாக சுந்தர் சி ன் திரைப்படங்கள், கதையையும், நடிப்பையும் சரியாகச் சேர்த்துள்ளதால், ரசிகர்களிடையே பிரபலமானவை. தியேட்டரில் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்கு படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.