தமிழ் சினிமாவிற்கு இதுவரை கிடைக்காத மாற்று நடிகர்.. சிவாஜியையே வளர்த்து விட்ட ஜாம்பவான்

தமிழ் சினிமாவில் இன்றைய இளம் தலைமுறைகளுக்கு ஒரு ரோல் மாடலாக இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடைய நடிப்பை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது. அந்த அளவுக்கு இவருடைய நடிப்பில் ஒரு எதார்த்தமும், உயிரோட்டமும் இருக்கும்.

இதன் காரணமாகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அப்படிப்பட்ட சிவாஜியே ஒரு நடிகரின் நடிப்பை பார்த்து வியந்து போயிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. நடிகர் திலகத்தையே ஆச்சரியப்படுத்திய ஒரு நடிகரும் இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல நடிகர் எம் ஆர் ராதா தான்.

பழம்பெரும் நடிகரான இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வித்தியாசமான குரலில் பேசும் இவருடைய மாடுலேஷனும், நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் இவரை அதிக பிரபலம் ஆக்கியது. அதிலும் இவர் நடித்த ரத்தக்கண்ணீர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

பல புதுமையான விஷயங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த பெருமையும் இப்படத்திற்கு உண்டு. தடம் மாறிப்போன ஒரு இளைஞரின் வாழ்க்கை எந்த அளவுக்கு மாறியது என்பதை துல்லியமாக காட்டி இருக்கும் அந்த படம் இதுவரை தமிழ் சினிமாவின் சிறந்த படமாக இருக்கிறது.

அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் எம் ஆர் ராதாவின் நடிப்பு அவ்வளவு தத்ருபமாக இருக்கும். இன்று வரை தமிழ் சினிமாவில் இவருக்கான மாற்று நடிகர் யாரும் கிடையாது என்று கூட சொல்லலாம். இது குறித்து சிவாஜியே பலமுறை பெருமையாக பேசி இருக்கிறார்.

எம் ஆர் ராதா போல் யாராலும் நடிக்க முடியாது. அவரிடம் இருந்துதான் நான் நடிப்பை கற்றுக் கொண்டேன் என்று அவர் அடிக்கடி கூறுவாராம். இந்த அளவுக்கு புகழ் பெற்ற எம் ஆர் ராதா சில பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் அவருடைய நடிப்பு திறமையும், அடையாளமும் இன்று வரை தமிழ் சினிமாவில் ஓங்கி இருக்கிறது.