திகிலுக்கும் சஸ்பென்ஸுக்கும் குறைவே இல்லாத ஹாரர் தமிழ் படங்கள்.. எந்த ஓடிடி-யில் பார்க்கலாம்

திகில் திரைப்படங்கள் என்றாலே ஒரு வித ஆசை. இருட்டில் சத்தமின்றி நடக்கும் மர்மங்கள், திடுக்கிடும் காட்சிகள் என அனைத்தும் ஒரு வேறுபட்ட அனுபவத்தை தருகிறது. அதிலும் தமிழ் ஹாரர் படங்கள் என்றால், திகிலோடு சில சமயங்களில் நகைச்சுவையும் கலந்து இருக்கும் என்பது ஒரு சிறப்பு.

இந்த வாரம் உங்கள் ஓடிடி அனுபவத்திற்கு சிறந்த தேர்வாக அமையக்கூடிய படம் ‘அவள்’. 2017 ல் வெளியான இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியது.

புதிய வாழ்க்கையைத் தொடங்கும் இளம் தம்பதிகள் ஒரு மர்மம் உள்ள வீட்டில் குடியேறுகிறார்கள். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த வாழ்க்கை, சில விசித்திரமான சம்பவங்களால் திசை திரும்புகிறது. அந்த வீட்டில் நடக்கும் மர்மங்கள் மற்றும் திகில் தரும் சம்பவங்கள், கதையை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பேய் காட்சிகள், பின்னணி இசை மற்றும் கதையின் திருப்பங்கள் மொத்தத்தில பாத்தா, இது ஒரு முழுமையான திகில் அனுபவம். இந்தப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் YouTube-இல் கிடைக்கிறது.

இதேபோல், 2022ல் வெளியான மற்றொரு திகில் படம் ‘பூச்சாண்டி’. மலேசியாவில் நடக்கும் இந்தக் கதையில் ஒரு பத்திரிகையாளர் திகில் சம்பவங்களை நேரில் அனுபவிக்கிறார். மர்மங்கள், பேய் பின்னணி மற்றும் அதில் சிக்கிக்கொள்ளும் நண்பர்கள் குழுவின் பயங்கர அனுபவங்கள் அனைத்தும் சேர்ந்து படத்தை த்ரில்லிங் அனுபவமாக மாற்றுகின்றன.

இதில் பேய் ஏன் வந்தது, அது யாருடன் சம்மந்தப்பட்டது என பல கேள்விகளும் பதில்களும் கதையில் அடுக்கடுக்காக வந்து கொள்கின்றன. நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் இந்த படம் சீரான ஹாரர் அனுபவம் மட்டுமல்லாமல் ஒரு நல்ல திரை அனுபவத்தையும் வழங்குகிறது. இவ்வாறு, இந்த இரண்டு படங்களும் உங்கள் வார இரவை ஒரு திகில் ருசியாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.