ஷங்கரால் ஏற்பட்ட பிளாக் மார்க்.. இப்போது வரை கெட்ட பேருடன் முத்திரை குத்தப்பட்ட நடிகை

இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்ட படங்களை கொடுத்து அதில் வெற்றி கண்டு ரசிகர்கள் மத்தியில் நன்பெயரை சம்பாதித்துள்ளார். இப்போது தெலுங்கில் ராம்சரனை வைத்து அவரின் 15ஆவது படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் தமிழில் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

இந்த இரண்டு படங்களுக்குமே மாதத்தில் சரியாக 15 நாட்கள் ஒதுக்கி வேலை பார்த்து வருகிறார். மேலும் இப்படங்கள் முடியும் தருவாயில் உள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் தன்னுடைய படங்களில் பல நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் அவருடைய படத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வரை சில பிரபலங்களின் அடைமொழியாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில் ஷங்கர் 20 வருடத்திற்கு முன்பு இயக்கிய படம் தான் பாய்ஸ். இந்த படத்தில் பரத், நகுல், ஜெனிலியா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் கிளாமராக நடித்த நடிகை புவனேஸ்வரிக்கு முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சுத்தமாக விருப்பம் இல்லையாம்.

ஆனால் இயக்குனர் ஷங்கர் கட்டாயப்படுத்தியதால் வேறு வழியின்றி பாய்ஸ் படத்தில் அந்தரங்க தொழிலாளியாக நடித்து பிளாக் மார்க் வாங்கினார். அதிலிருந்தே புவனேஸ்வரிக்கு அடுத்தடுத்த கதாபாத்திரங்களும் ஏடாகூடமான கதாபாத்திரங்களாக தான் வர தொடங்கியது.

ஏனென்றால் ஷங்கர் படத்தில் இவ்வாறு முத்திரை குத்தப்பட்டதால் மற்ற இயக்குனரும் புவனேஸ்வரி இடம் அதேபோன்ற கதாபாத்திரத்தை எதிர்பார்த்து உள்ளனர். மேலும் வேறு வழியின்றி புவனேஸ்வரியும் தொடர்ந்து இது போன்ற கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார்.

மேலும் படங்களில் மிகுந்த கவர்ச்சி காட்டி வந்த புவனேஸ்வரி பின்னர் பலான வழக்கிலும் சிக்கி சர்ச்சைக்கு உள்ளானார். இதனால் தற்போது வரை இவர் மீது உள்ள களங்கம் நீங்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் ஒரு வகையில் ஷங்கர் ஆரம்பத்தில் கொடுத்த கதாபாத்திரம் தான் என்று பலரால் பேசப்பட்டு வருகிறது.

arun

Arun

அருண்- சினிமாபேட்டையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார்.

View all posts →