சீரியல் திரில்லர் படமாக வெளியான நூறாவது நாள் திரைப்படம் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்காரச் செய்தது. 100 நாட்களில் ஜெயப்பிரகாஷ் என்பவன் 9 கொலைகளை செய்துவிட்டு வீட்டின் சுவரில் புதைத்து வைத்திருப்பான். இந்த படம் ஆங்கில படத்தின் தழுவல் எனக் கூறப்பட்டது.
ஆனால் படத்தின் திரைக்கதையில் அத்தனை வித்தகைகளையும் காட்டி இருந்தார் மணிவண்ணன். இந்த படம் குறைந்த செலவில் 12 நாட்களில் எடுக்கப்பட்டது. இளையராஜாவின் இசை இப்படத்திற்கு மேலும் வலு சேர்த்தது. மோகன் மற்றும் நளினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நூறாவது நாள் படத்தில் விஜயகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். இவர்களை எல்லாம் தாண்டி படத்தில் சில காட்சிகள் மட்டுமே நடித்த சத்யராஜ் பெயர் வாங்கிச் சென்றார். முதலில் இந்த படத்தில் ரமணா படத்தில் நடித்த வில்லன் நடிகர் விஜயன் நடிப்பதாக இருந்தது.
அந்தச் சமயத்தில் தான் மணிவண்ணனை சந்தித்துள்ளார் சத்யராஜ். அப்போது சத்யராஜ் வாய் துணைக்காக நக்கலாக பேசுகின்றார். இதனால் நூறாவது நாள் படத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு சத்யராஜ் சரியாக இருப்பார் என மணிவண்ணன் முடிவு செய்துள்ளார்.
அதேபோல் நூறாவது நாள் படத்தில் நெடுநடுவன வளர்ந்த சத்யராஜ் ரவுண்டு கண்ணாடி உடன் மொட்டை அடித்த கெட்டப் அந்த கதாபாத்திரத்திற்கு ரொம்ப பொருத்தமாக இருந்தது. அதுமட்டுமின்றி சத்யராஜ் படத்தில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். அதன் பிறகு வில்லன் கதாபாத்திரம் என்றாலே சத்யராஜ் தான்.
அதன் பின்பு மணிவண்ணன் இயக்கிய பல படங்களில் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அதுவும் மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான அமைதிப்படை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நக்கல் மன்னர்களின் சந்திப்பு நூறாவது நாள் படத்தில் தொடங்கி மணிவண்ணனின் இறுதி வரை பயணித்தது.