ஜோசியம் பார்த்து கணித்த ராமராஜன்.. அன்றே தெரிந்து கொண்ட நளினி

80 கால கட்ட தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜனுக்கு இப்போதும் கூட ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையான ஹீரோவாக இருந்த இவர் தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.

பல நல்ல கதாபாத்திரங்கள் வந்தும் கூட இவர் அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. இந்நிலையில் இவருடைய திருமணம் மற்றும் விவாகரத்து பற்றிய சில தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமாக இருந்த நடிகை நளினியை தான் ராமராஜன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இந்த ஜோடி சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். இப்போது வரை அவர்கள் இருவரும் வேறு ஒரு திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நளினி தங்களுக்கு விவாகரத்து நடக்கும் என்று தெரிந்தே தான் திருமணம் செய்து கொண்டதாக ஒரு அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார். அதாவது ராமராஜனுக்கு நன்றாக ஜோசியம் பார்க்க தெரியுமாம். அவர்கள் இருவரும் காதலித்த சமயத்தில் அவர் நளினியிடம் நமக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்தால் நாம் சேர்ந்து வாழாமல் பிரிந்து விடுவோம் என்று கூறினாராம்.

இதைக்கேட்ட நளினி அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, அப்படியே இருந்தாலும் வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியம் கூறினாராம். அதன் பிறகு அவர்களின் காதலுக்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதை எல்லாம் தாண்டி எப்படியோ அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்திருக்கின்றனர்.

ஆனால் சில வருடங்களிலேயே ராமராஜன் கணித்தது போல் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து விடலாம் என்று முடிவு செய்தார்களாம். மேலும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து சண்டையிட்டுக் கொள்வதை விட தூரத்திலிருந்தே காதலிக்கலாம் என்று அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் நளினி, ராமராஜன் இருவரும் விவாகரத்துக்கு பிறகும் கூட நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.