கேஎஸ் ரவிக்குமாரை பிரிந்ததற்கு இதுதான் காரணம்.. ஓப்பனாக பேசிய சேரன்

தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி தன் நடிப்பினையும் வெளிக்காட்டியவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவர் படங்கள் பல கமர்சியல் ஹிட் கொடுத்த நிலையில் இயக்குனர் சேரன் இவரை பற்றிய தகவலை ஓபன் ஆக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

90 காலகட்டத்தில் இருந்து இவர் இயக்கிய படங்கள் பல, அதிலும் குறிப்பாக ரஜினி, கமலை வைத்து இவர் இயக்கிய படங்கள் கமர்சியல் ஹிட் கொடுத்துள்ளது. இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் இயக்குனர் சேரன்.

வறுமை காரணமாக இவரிடம் வேலை தேடி சென்ற பொழுது தன்னை அவர் பட இயக்கத்தில் உதவி செய்ய சொன்னாராம் கே எஸ் ரவிக்குமார். அவ்வாறு 1990ல் புரியாத புதிர் படத்தில் கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனராக அறிமுகமானவர் தான் சேரன்.

அதன் பின் இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த படங்கள் தான் பாண்டியன் மற்றும் நாட்டாமை. அவ்வாறு தன் அயராத உழைப்பை மேற்கொண்டு வெறும் 28 நாட்கள் தன் படப்பிடிப்பை முடித்து காட்டினாராம் சேரன். மேலும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் தொடர்ந்து இவர் மேற்கொண்டு படங்கள் வெற்றி தந்ததாகவும் கூறினார்.

இந்நிலையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தன்னிடம் ஒரு இயக்குனராக கடுமையாக நடந்து கொண்டதால் அவரை விலகி சென்றதாகவும் கூறினார். ஒரு இயக்குனராக அவர் கருத்தை முன்வைத்த போது நான் ஒன்று கூற, அவர் ஒன்று கூட அவ்வாறு ஏற்பட்ட வாக்குவாதத்தால் இனி சரிவராது என முடிவெடுத்து விலகியதாக மனம் திறந்து ஓப்பனாக பேசினார் சேரன்.

மேலும் வறுமை காரணமாக அவரிடம் திரும்பி சென்று நின்ற போது வாக்குவாதம் எதையும் பொருட்படுத்தாமல் தனக்கு வாய்ப்பு கொடுத்ததாக கூறினார். ஆயிரமே இருந்தாலும் அவரை இன்று வரை நான் குருவாக தான் பார்க்கிறேன் எனவும் கூறி பெருமிதம் பட்டார். இது போன்ற கருத்து வேறுபாடுகளால் தான் அவரை விட்டு விலகியதாகவும் ஓப்பனாக பேசினார் சேரன்.