மண்ணின் வாசனை மாறாத தங்கர் பச்சானின் டாப் 5 படங்கள்

தங்கர் பச்சான் ஒரு முக்கியமான தமிழ் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ் சினிமாவில் தனித்துவமான தனது படைப்புகளை உருவாக்கி உள்ளார். இவர் இயக்கிய சில படங்களை பார்க்கலாம்.

தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002ல் வெளியான ‘அழகி’ அவரது முதல் திரைப்படமாகும். பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

2007 ல் இவர் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்றான ‘பள்ளிக்கூடம்’ படத்தில் நரேன், சினேகா, ஷ்ரேயா ரெட்டி, சீமான் மற்றும் தங்கர் பச்சானும் நடித்திருந்தார். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

சத்யராஜ், அர்ச்சனா, நாசர் மற்றும் ரோகிணி ஆகியோர் இணைந்து நடிக்க தங்கர் பச்சான் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஒன்பது ரூபாய் நோட்டு. இத்திரைப்படம் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற நூலின் திரைவடிவம் ஆகும். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.

2012 ல் இவர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடித்த ‘அம்மாவின் கைபேசி’ திரைப்படத்தில் இனியா, ரேவதி, அழகம் பெருமாள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரோஹித் குல்கர்னி இசையமைத்துள்ளார்.

சொல்ல மறந்த கதை 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சேரன் நடித்த இப்படத்தை தங்கர் பச்சான் இயக்கினார். இப்படத்தின் கதை நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் என்ற புதினத்தின் திரை வடிவமாகும்.

தனது படைப்புகளில் மனதிற்குள் பதியும் மனித உணர்வுகளையும், கிராமியவாழ்க்கை அழகாக சொல்லும் தங்கர் பச்சான், தமிழ் சினிமாவில் ஒரு தனித்த அடையாளம் பதித்துள்ளார். அவரது திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கின்றன.