தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லோருக்கும் தனி மாஸ் இமேஜ் இருக்கு.
அதைத் தாண்டி சில நேரங்களில் ரிஸ்க் எடுத்து, வித்தியாசமான கதைகளில் நடிச்சு surprise குடுத்துருக்காங்க.ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் தனுஷ் வரை – அந்த மாதிரி bold steps எடுத்த அந்த special படங்கள் என்னென்ன இப்போ பார்க்கலாம்.
ரஜினி : ஆரம்பத்தில் கமலுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்து, பின்னால் ஹீரோவாக உயர்ந்தார்.பன்ச், சண்டை, ஸ்டைல் என தனிக்குத்து இமேஜ் உருவானது. அதை முற்றிலும் தாண்டி, ‘ஸ்ரீ ராகவேந்திரர்’-ல் அமைதியான ஆன்மிக பாத்திரத்தில் நடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்த படம் ரஜினியின் versatility-யை நிரூபித்த ஒரு bold move.
கமல்ஹாசன்: கமல் என்றாலே acting-க்கு எல்லையே இல்லை. ‘மூன்றாம் பிறை’-ல் அவர் எடுத்த பாத்திரம் மிகுந்த உணர்வுகளோட கூடியது. மெளனமும், வேதனையும் ஒரே பார்வையில் சொல்லி goosebumps கொடுத்தார். இது கமலின் நடிப்புத் திறமையின் உச்சநிலை.
விஜய் :’நண்பன்’-ல விஜய் நடிக்கப்போறார்னு கேட்டதும் பலருக்கும் doubt தான் – அமீர் கான் போல act பண்ண முடியுமா?மாஸ் ஹீரோ விஜய், feel-good student role-ல suit ஆகுவாரா என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருந்தது. ஆனா ஷங்கர் இயக்கத்தில் 2012-ல் வெளியான படம் super hit ஆகி, விஜய்யின் acting க்கு பலரும் கைதட்டினாங்க. ‘நண்பன்’ – விஜய்யின் image-ஐ தாண்டி, ஒரு classy performance கொடுத்த turning point.
விக்ரம்: விக்ரம்என்றாலே action, mass performance நம்ம மனசுலதான் வருகிறது. ஆனா ‘பிதாமகன்’-ல அவர் mute character-ல எதுவும் பேசாமலே full emotion காட்டி நடிப்பால் பேச வைத்தார்.அந்த படம் மூலம் “நடிப்புக்கே ஒரு வடிவம்” என்று நிரூபித்தார். பிதாமகன் – விக்ரமின் acting range-க்கு standing ovation கிடைத்த படம்.
அஜித்: மாஸ் ஹீரோ இமேஜை உடைத்து, பரதநாட்டிய கலைஞராக அஜித் மிரட்டிய வரலாறு திரைப்படம், மூன்று வேறு வேறு கதாபாத்திரங்களில் அவன் நடிப்புத் திறமை பளிச்சென்று தெரிந்தது. “இது அஜித்துக்கு செட்டாவாரா ? என டவுட் வந்தவர்களும், பின்னால் பாராட்டிக் கொண்டே போனார்கள். இன்றும் வரலாறு, அஜித்தின் சிறந்த படங்களில் ஒன்று!
சூர்யா: சூர்யா என்றாலே Singam மாதிரி mass police roar தான் first recall!
ஆனா ‘நந்தா’, ‘ஜெய் பீம்’ மாதிரி deep, emotional கதைகளில் வந்து true performer-nu நிரூபிச்சாரு. அந்த intense roles-ல அவர் காட்டிய உணர்வு நேரடியாக மனசுக்கு பஞ்ச் அடிச்சது. Mass-ஐ தாண்டி class-யும் perfectly handle பண்ணும் actor தான் சூர்யா.
தனுஷ் : village style-ல rustic look இருந்தாலும், actingல full real feel தர்றவர்.
‘அசுரன்’, ‘ ‘கர்ணன்’ மாதிரி கதைகளில் raw, rooted performance-ல soul-level touch கொடுத்தார். Versatility-யும் intensity-யும் perfectly balance பண்ணும் National-level actor தான் இவர். மாஸ்-க்கும் அர்த்தமுள்ள கதைக்கும் சமநிலை வைத்து நடிக்கும் ஹீரோக்கள் தான் உண்மையான சினிமா அரசர்கள்.