மனதை திருடும் டாப் லிஸ்ட் படங்கள்.. இயக்குனரை கொண்டாட மறந்த சினிமா உலகம்

Movies : சினிமாவில் இன்றளவும் நிறைய படங்கள் போர் அடிக்காமல் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. அப்படத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் மட்டும்தான் இன்றும் டாப்பில் இருக்கின்றனர். இயக்குனர்களின் நிலை என்ன என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. இதுதான் இன்றைய சினிமா.

அப்படி தமிழ் சினிமா கொண்டாட மறந்த இயக்குனர்களில் ஒருவர் எழில். இவர் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும், மனதை கவரும் விதமாகவும், இன்றளவும் தமிழ் சினிமாவில் டாப் லிஸ்டில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவர் இயக்கிய டாப் லிஸ்ட் திரைப்படங்களை தற்போது பார்ப்போம்.

துள்ளாத மனமும் துள்ளும்..

விஜய் மற்றும் சிம்ரன் காம்பினேஷனில் 1999 ஆம் ஆண்டு திரைப்படம் வெளியானது. ஆரம்பத்தில் வரவேற்பு இல்லை என்றாலும் பின்பு பயங்கரமான வரவேற்பு திரைப்படத்திற்கு கிடைத்தது. படத்தில் இருக்கும் பாடல்களும் இன்றளவும் சலிக்காமல் மக்கள் மனதில் ஆழமாக நிலைத்திருக்கிறது

பூவெல்லாம் கேட்டுப்பார்..

சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் அஜித் மற்றும் ஜோதிகாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது. படத்தில் கொஞ்சம் ட்விஸ்ட் வைத்து கொஞ்சம் தன் கற்பனை கலந்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் எழில்.

பெண்ணின் மனதை தொட்டு..

ஆரம்ப காலகட்டத்தில் பிரபுதேவா நடித்த திரைப்படம் பெண்ணின் மனதை தொட்டு. 2000-ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு பயங்கரமாக கிடைத்தது. இயக்குனர் எழில் இலக்கிய டாப் லிஸ்ட் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

இந்த டாப் ஹிட் திரைப்படங்களை கொடுத்த பிறகும், சில நாட்கள் கழித்து தீபாவளி, தேசிங்கு, ராஜா, வேலைன்னு வந்துட்டா, வெள்ளைக்காரன் சரவணன், இருக்க பயமேன் போன்ற திரைப்படங்களில் தனது இயக்கம் திறமையை வெளிப்படுத்தி இருப்பார் இயக்குனர் எழில்.