1980-90களில் தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், நடிகர்கள் என்றே தனித்துவம் பெற்றவர்கள் இருந்தாலும், இயக்கம், நடிப்பு, இசை, பாடல், ஒளிப்பதிவு, தயாரிப்பு என அனைத்திலும் ஒரே நேரத்தில் பங்களித்தவர் டி.ராஜேந்தர். அவருடைய திரைப்படங்கள் சில நேரங்களில் விமர்சனங்களை சந்தித்தாலும், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவை. அவரது படங்கள் தமிழ்சினிமாவில் தனி ஓர் அடையாளத்தை ஏற்படுத்தின.
“உயிருள்ளவரை உஷா” படம் மூலம் டி.ஆர் ஹீரோவாக அறிமுகமானார், இது முதலில் ‘செயின் ஜெயபால்’ என பெயரிடப்பட்டிருந்தது. “உறவைக்காத்த கிளி” படம் மூலம் சிம்பு ‘சிலம்பரசன்’ என்ற பெயரில் திரையுலகில் அறிமுகமானார்.
“மைதிலி என்னை காதலி” படம் மூலம் அமலா அறிமுகமானார், இதில் உள்ள “அட பொன்னான மனசே” பாடல் மெகா ஹிட். “ஒரு தாயின் சபதம்” படம் ஹிந்தி படமான Meri Jung ரீமேக், இதில் டி.ஆர். ஒரு வழக்கறிஞராக நடித்தார். “என் தங்கை கல்யாணி” படத்தில் சிம்புவின் ஒவ்வொரு சீனும் தியேட்டரில் பாராட்டு பெற்றது.
“சம்சார சங்கீதம்” படத்தில் “I am a little star, ஆவேனா Super Star” என்ற பாடல் மூலம் சிம்புவில் கனவுகளை விதைத்தார். “சாந்தி எனது சாந்தி” படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திர விருது வென்ற சிம்பு, ராதாவுடன் இணைந்தார். “எங்க வீட்டு வேலன்” திரைப்படம் சிம்புவின் முதல் டைட்டில் ரோல் மற்றும் வெற்றி பெற்ற படம்.
“தாய் தங்கைப் பாசம்” படத்தில் சிம்பு ‘வேலு’ கதாபாத்திரத்தில் நடித்தார் விமர்சனத்துக்கு உள்ளான படம்.“மோனிஷா என் மோனலிஷா” படத்தில் டி.ஆர் சினிமா இயக்குநராக வந்தார், இதில் மும்தாஜ் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
“சொன்னால் தான் காதலா” படம் முரளிக்கு ஏற்ற காதல் கதையாக அமைந்தது, இதில் சிம்பு ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தார். “காதல் அழிவதில்லை” படத்திலும் டி.ஆர் பாணி தொடரப்பட்டது.
T. ராஜேந்தர் அவருடைய படங்கள் நகைச்சுவை, உணர்ச்சி, குடும்ப பாசம், காதல் என எல்லா அம்சங்களையும் மையமாகக் கொண்டிருந்தன. சிம்புவை சிறு வயதிலிருந்து நடிகராக உருவாக்கி, அவரது சினிமா பயணத்திற்கு வித்திட்ட பெருமை TR-க்கு உண்டு. நேர்மையான பாசத்தையும் கலையின் மீது கொண்ட அன்பையும் மையமாக கொண்ட T. ராஜேந்தர் படங்கள், இன்றும் nostalgia ஆக பேசப்படும்.