விஜய், மனோபாலா காம்போவில் குறும்புத்தனமான 5 ஹிட் படங்கள்.. மன்சூர் அலிகான் உடன் செம ரகளை

பொதுவாகவே சினிமா பொருத்தவரை முன்னணி நடிகர்களுடன் நடிப்பதையே மிகப்பெரிய ஆசையாக வைத்திருப்பார்கள். எப்படியாவது ஒரு படத்துலயாவது நடிக்க மாட்டோமா என்று நினைத்திருக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கு மத்தியில் விஜய்யுடன் மனோபாலா ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அவர் விஜய்யுடன் நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

நண்பன்: ஷங்கர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு நண்பன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன், மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மனோபாலாவின் கேரக்டர் நூலகத்தில் வேலை பார்க்கும் போஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். சத்தியனுக்கு பேச்சு போட்டிக்கு சொல்லிக் கொடுக்கும் நூலகராக இருப்பார். இதில் விஜய், மனோ பாலாவை டைவர்ட் பண்ணி சத்தியனுக்கு வேற ஒன்றை பேச்சுப் போட்டிக்கு ரெடி பண்ணி கொடுப்பார். பின்பு இது தெரியாமல் சத்யராஜிடம் சத்யன் பேசும்போது அவருக்கு எல்லாமே நான் தான் எழுதி கொடுத்தேன் என்று அப்பாவித்தனமாக நடித்திருப்பார்.

துப்பாக்கி: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு துப்பாக்கி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம் மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மனோபாலாவின் கேரக்டர் ஹீரோயின்க்கு அப்பாவாக இருப்பார். இதில் காஜல் அகர்வாலை பொண்ணு பார்க்க வரும்போது மிலிட்டரி யூனிபார்ம் போட்டு விஜய் வருவதை பார்த்து மனோ பாலா அவரின் அப்பாவிடம் என்ன மாப்பிள்ளை வரவில்லையா என்று கேட்பதும், இவர்தான் மாப்பிள்ளை என்று சொல்லபோது என்ன அப்படியே சண்டை போட்டுட்டு வந்துட்டாரா என்று நக்கலாக சொல்லி இருப்பார். அதிலும் பொண்ணு பார்த்து போன பிறகு மகளிடமும் ஒரு அடி வாங்குவார். இதைப் பார்க்கும்போது நமக்கு சிரிப்புதான் வரும் அந்த அளவுக்கு அவருடன் ரியாக்ஷன் இருக்கும்.

வேட்டைக்காரன்: பி பாபுசிவன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வேட்டைக்காரன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், அனுஷ்கா, சங்கீதா படுகோன், மனோபாலா மற்றும் சத்யன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மனோபாலா நிருபராக நடித்திருப்பார். இதில் ஒரு காமெடியனாக வில்லன் இடம் மாட்டிக் கொடுக்கும் கேரக்டரில் சில குறும்புத்தனமான விஷயங்களை செய்து நடித்திருக்கிறார்.

அழகிய தமிழ் மகன்: இயக்குனர் பரதன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு அழகிய தமிழ் மகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ஸ்ரேயா,நமீதா, சந்தானம், சத்யன் மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் மனோபாலாவின் கேரக்டர் ரயில் பயண டிக்கெட் பரிசோதராக நடித்திருக்கிறார்.

மின்சார கண்ணா: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு மின்சார கண்ணா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், மோனிகா, குஷ்பூ, ரம்பா, மணிவண்ணன், கரன், மன்சூர் அலிகான் மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மனுபளாவின் கேரக்டர் மன்சூர் அலிகானுக்கு வேலை பார்க்கும் உதவியாளராக நடித்திருக்கிறார். இதில் இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் மன்சூர் அலிகானை கிண்டல் அடிப்பது போலவே இருக்கும். இவர் செய்யும் ரகளைக்கு அளவே கிடையாது அந்த அளவிற்கு ஒவ்வொரு விஷயத்திலும் அவரை மாட்டி விடும்படியை நடித்திருப்பார்.