ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 5 படங்கள்.. 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய வைதேகி காத்திருந்தாள்

விஜய்காந்த் ஆரம்ப காலத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அப்படிப்பட்ட இவர் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்து வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அந்தப் படங்களை பற்றி பார்க்கலாம்.

அம்மன் கோவில் கிழக்காலே: 1986 ஆம் ஆண்டு ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் அம்மன் கோவில் கிழக்காலே என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ராதா, ஸ்ரீவித்யா, செந்தில் மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்தார்கள். இந்த படத்தில் சுந்தர்ராஜன் முதலில் ரஜினிகாந்த் மற்றும் முரளியை வைத்து தான் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் சில காரணங்களால் அவர்கள் நடிக்கவில்லை. அப்பொழுது வைதேகி காத்திருந்தாள் வெற்றியடைந்த பிறகு மறுபடியும் விஜயகாந்த் இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். அதே மாதிரி இந்த படமும் விஜயகாந்துக்கு ஒரு சிறந்த நடிகர் என்ற விருதை பெற்றுக் கொடுக்கும் அளவிற்கு வெற்றிப் படமாக மாறியது.

வைதேகி காத்திருந்தாள்: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வைதேகி காத்திருந்தால் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் விஜயகாந்த் மற்றும் ரேவதி அவர்களுக்கு காதல் கை கூடாமல் போய்விடும். அந்த நடிப்பை இருவரும் உணர்ச்சிப் பூர்வமாக வெளிக்காட்டிருப்பார்கள். இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது மற்றும் விஜயகாந்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை படமாக மாறியது.

தழுவாத கைகள்: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு தழுவாத கைகள் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜயகாந்த், அம்பிகா, செந்தில், அனுராதா ஆகியோர் நடித்தார்கள். இந்த படம் இவர்கள் கூட்டணியில் கொஞ்சம் ஏமாற்றம் அடைய வைத்தது என்று சொல்லலாம். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று சராசரி வணிகரீதியை பெற்றது.

என்கிட்ட மோதாதே: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு என்கிட்ட மோதாதே என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், சோபனா, குஷ்பூ ஆகியோர் நடித்தார்கள். இதில் விஜயகாந்த் குஷ்பூ இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள். ஆனால் இவர்கள் காதலை பிரித்து இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக இக்கதை அமைந்திருக்கும்.

என்ன ஆசை மச்சான்: 1994 ஆம் ஆண்டு ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் என் ஆசை மச்சான் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜயகாந்த், முரளி, ரேவதி, ரஞ்சிதா ஆகியோர் நடித்தார்கள். இப்படம் பாசத்திற்கும், காதலுக்கும் நடுவே ஏற்படும் போராட்டங்களை முக்கிய கருத்தாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் வரும் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள் ஆனது.