1. Home
  2. எவர்கிரீன்

விஜயகாந்த் தவறவிட்ட 3 சூப்பர் ஹிட் படங்கள்.. இதுல நடிச்சிருந்தா கேப்டன்தான் சூப்பர் ஸ்டார்

விஜயகாந்த் தவறவிட்ட 3 சூப்பர் ஹிட் படங்கள்.. இதுல நடிச்சிருந்தா கேப்டன்தான் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடித்து விட்டுக்கொடுத்த 3 படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம். சினிமா வாழ்க்கையிலும் சரி சொந்த வாழ்க்கையிலும் சரி உதவி கேட்டு வருபவர்களுக்கு தயங்காமல் உதவி செய்பவர்தான் விஜயகாந்த். விஜயகாந்த்  விட்டுக்கொடுத்து வெற்றி கண்ட படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முரட்டுக்காளை: ஏவிஎம் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஹீரோவா நடித்த படம்தான் முரட்டுக்காளை.இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜயகாந்துக்கு அழைப்பு வந்தது. ஆனால் கேப்டன் அவர்கள் ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர். அவருக்கு வில்லனாக நடிக்க என்னால் முடியாது என்று மறுத்துவிட்டார்.

இணைந்த கைகள்: விஜயகாந்த் நடிக்க இருந்த படம் தான் இணைந்த கைகள். ஆனால் என்ன காரணத்தாலோ கேப்டனால் இந்த படத்தில் நடிக்க முடியாம போய்விட்டது. பிறகு இப்படத்தில் அருண்பாண்டியன் மற்றும் ராம்கி நடித்திருந்தனர்.

மறுமலர்ச்சி: இதேபோல சூப்பர் ஹிட் திரைப்படமான மறுமலர்ச்சி கதையை முதன் முதலாக கேப்டன்கிட்ட தான் சொன்னாங்க. கேப்டன் கால்ஷீட் பிரச்சனையால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.