தளபதி விஜய்யின் சினிமா கேரியரில் அவருடைய கேரியரை விட வேகமாக வளர்ந்தது அவரது சம்பளம் தான். ரஜினிகாந்த் 70 வயதில் வாங்கும் சம்பளத்தை விஜய் 47 வயதிலேயே வாங்கத் தொடங்கி விட்டார்.
இன்னும் வரும் காலங்களில் விஜய்யின் சம்பளம் பலமடங்கு உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு காரணம் படத்திற்கு படம் விஜய்யின் மார்க்கெட் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நல்ல வசூல் செய்ய தொடங்கியுள்ளதுதான்.
விஜய்யின் ஆரம்ப காலகட்டங்களில் அவருடைய கேரியரை செதுக்குவதாக நினைத்துக் கொண்டு அவரை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தார் எஸ் ஏ சந்திரசேகர். அப்பாவின் கைக்குள் இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதை புரிந்து கொண்ட விஜய் விக்ரமன் இயக்கத்தில் நடிக்க வந்த வாய்ப்பை பிடித்தார்.
அந்தப் படம்தான் பூவே உனக்காக. குருவி தலையில் பனங்காயை வைக்கலாமா? என பலரும் விக்கிரமனை எச்சரிக்க, தைரியமாக விஜய்யை வைத்து தாறுமாறான வெற்றி படத்தை கொடுத்தார். இன்னும் பல வருடத்திற்கு பூவே உனக்காக படத்தின் வசூல் சாதனை பேசும்.
இப்படிப்பட்ட மிகப்பெரிய வெற்றிப் படத்தில் நடித்த விஜய்யின் சம்பளம் வெறும் 5 லட்சம் தானாம். ஆனால் பூவே உனக்காக படத்திற்கு பிறகு விஜய்யின் மார்க்கெட் படுவேகமாக உயர்ந்ததாக கூறுகின்றனர். அடுத்த 3 வருடத்தில் 22 லட்சம் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்டாராம்.

அதனைத் தொடர்ந்து தற்போது விஜய்யின் வளர்ச்சியும் அவரது சம்பளத்தையும் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. பீஸ்ட் படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு நூறு கோடி சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் 130 கோடி சம்பளம் கொடுத்து அடுத்த படத்தில் கமிட் செய்ய தெலுங்கு நிறுவனம் தயாராக உள்ளது.